இலங்கையின் முதலாவது கால்நடை காப்புறுதித் திட்டத்தின் தொடக்கம்

கிராமப்புற வாழ்வாதாரங்களையும்தனித்துவமிக்க இலங்கைச் சிறுத்தைகளையும் பாதுகாத்தல்

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தனது பல்லுயிர் நிதி முன்முயற்சியின் (BIOFIN) கீழ், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) மற்றும் LOLC ஆகியவற்றுடன் இணைந்து, வனவிலங்குப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், மனித-வனவிலங்குகளுக்கிடையிலான முரண்பாட்டு நிலைமைகளைக் குறைத்தல் மற்றும் அருகி வரும் இலங்கைக்கேயுரிய சிறுத்தை இனத்தைப் (Panthera pardus kotiya) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதொரு முன்னோடி கால்நடை காப்புறுதித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்வில் வனவிலங்குப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் திரு. ரஞ்சன் மாரசிங்க; ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி திருமதி. அசுசா குபோட்டா; LOLC இன் தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு. கித்சிறி குணவர்தன; தலைவர் திரு. கிரஹம் மார்ஷல்; மற்றும் WNPS இன் செயற்திட்டத் தலைவர் ஸ்பென்சர் மனுவல்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தனது பல்லுயிர் நிதி முன்முயற்சியின் (BIOFIN) கீழ், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) மற்றும் LOLC ஆகியவற்றுடன் இணைந்து, வனவிலங்குப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், மனித-வனவிலங்குகளுக்கிடையிலான முரண்பாட்டு நிலைமைகளைக் குறைத்தல் மற்றும் அருகி வரும் இலங்கைக்கேயுரிய சிறுத்தை இனத்தைப் (Panthera pardus kotiya) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதொரு முன்னோடி கால்நடை காப்புறுதித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்வில் வனவிலங்குப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் திரு. ரஞ்சன் மாரசிங்க; ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி திருமதி. அசுசா குபோட்டா; LOLC இன் தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு. கித்சிறி குணவர்தன; தலைவர் திரு. கிரஹம் மார்ஷல்; மற்றும் WNPS இன் செயற்திட்டத் தலைவர் ஸ்பென்சர் மனுவல்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்குரிய சிறுத்தையானது, தீவின் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள, உச்சளவில் வேட்டையாடும் தன்மை கொண்ட உயிரினமாகக் காணப்படுகின்றது; இது தாவர உண்ணிகளின் சனத்தொகையை ஒழுங்கமைக்கின்றது. அத்துடன் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுகின்றது. அரிய வகை இனமொன்று என்னும் வகையில், அதன் உயிர்வாழ்வு ஆரோக்கியமான வாழ்விடங்களுக்கு மிகவும் முக்கியமானதாகின்ற அதே நேரத்தில் இந்த இனமானதுவில்பத்து, யால, குமண மற்றும் ஹோர்டன் சமவெளி போன்ற தேசிய பூங்காக்களில் காணப்படுகின்றமையினால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அவ்விடங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த சிறுத்தை இனத்தின் வாழ்விடங்கள் சுருங்கி வருதல், காடுகள் நிலங்களாக்கப்படுதல் மற்றும் வேட்டையாடுதல் ஆகிய காரணிகள் மூலம் இந்த சிறுத்தைகளுக்கு இயற்கையான முறையில் கிடைக்கின்ற இரைகள் குறைவடைந்துள்ளமையினால், சில சிறுத்தைகள் மனிதர்கள் ஊடாடும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன; அங்கு அவை அவ்வப்போது கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இது கிராமப்புற விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுப்பதோடு பல சந்தர்ப்பங்களில், அவ்விவசாயிகள் இந்த சிறுத்தைகளைப் பழிவாங்கும் நோக்கில் அவற்றைக் கொலை செய்வதற்குத் தூண்டப்பட்டுள்ளதுடன் அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக அந்த சிறுத்தைகள் அருகிச் செல்லும் ஆபத்துக்கும் அது வழிவகுத்துள்ளது.

இத்தகையதொரு காப்புறுதித் திட்ட நடவடிக்கை பற்றிக் கரிசனை கொண்டு, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ரஞ்சன் மாரசிங்க பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “இந்தத் திட்டம் சிறுத்தைகளபை் பாதுகாப்பதை நோக்கிய நீண்டகால சவாலுக்கு தக்க தருணத்தில் நடைமுறைசார் தீர்வை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாகவும் நியாயமாகவும் இழப்பீட்டுத்தொகையை வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், சிறுத்தைகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, சமூகங்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கையை நாம் கட்டியெழுப்புகின்றோம். கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இலங்கைக்கேயுரிய உச்ச வேட்டையாடும் உயிரினமாகிய சிறுத்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கையான  நடவடிக்கையாகவும் அதனை நாம் காண்கின்றோம்.”

2022 ஆம் ஆண்டில், வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சங்கம், LOLC ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய ரீதியாக பல சிறுத்தை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்கியதுடன், பனாமா, சீகிரியா, கிளிநொச்சி, பெலிஹுல் ஓயா, கலவான மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் ஆறு ஆராய்ச்சி மையங்களையும் நிறுவியது. சீகிரியா ஆராய்ச்சிப் பகுதியில் நடத்தப்பட்ட அடிப்படை ஆராய்ச்சிகள் மூலம், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இடையக மண்டலங்களைச் சேர்ந்த கிராமங்களில் அடிக்கடி கால்நடை வேட்டையாடப்படுவது கண்டறியப்பட்டது. இச்சம்பவங்களில் மூலம் நஞ்சூட்டுதல், கண்ணிவெடி வைத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல வகையான அறிக்கையிடப்படாத சிறுத்தைகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய விளைவுகளுக்க நேரடியான தீர்வாக இந்தக் கால்நடை இழப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நியாயமான நிதி உதவியை வழங்குதல், கால்நடை இழப்பின் காரணமாக விளையும் பொருளாதார ரீதியான தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் சிறுத்தை இனத்தைப் பாதுகாப்பதன் மீதான நன்மதிப்பினை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேட்டையாடும் சம்பவங்கள் குறித்த தரவு சேகரிப்பை மேம்படுத்தவும், முன்கூட்டியே மோதல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் ஏற்படுத்த முனைகின்றது.

காப்புறுதிக் கூட்டாண்மையாளர்களின் பார்வையில், LOLC காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் திரு. கித்சிரி குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “சிறுத்தை இனத்தை வேட்டையாடுதலுக்கான இலங்கையின் முதல் கால்நடை இழப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் UNDP, DWC & வனவிலங்கு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் சங்கத்துடன் கூட்டிணைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த முன்முயற்சி அவசர பாதுகாப்புத் தேவையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல்கிராமப்புற வாழ்வாதாரங்களை ஆதரிக்கும் அதே வேளையில்பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான எமது நீண்டகால உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது. நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம்சமூகங்களும் வனவிலங்குகளும் செழித்து வளரக்கூடிய நிலைபேறான தீர்வுகளை உருவாக்க முடியும்.

இலங்கையில் UNDP, அதன் உயிரினப் பல்வகைமை சார் நிதி வழங்கல் செயற்பாட்டின் (BIOFIN) மூலம், காப்புறுதிக் கட்டுநிதிக்கான செலவை வழங்கவுள்ளது. LOLC ஹோல்டிங்ஸ் திட்டத்தின் காப்புறுதி வழங்குநராக இது செயற்படுகிறது. சிறுத்தை இனத்தை வேட்டையாடுவதனால் ஏற்படும் கால்நடை இழப்புகள் குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த சம்பவத்தை நியமிக்கப்பட்ட WNPS பிராந்திய அலுவலரிடம் தெரிவிக்கலாம். வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், கால்நடை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் போன்றோருடன் இணைந்து, குறித்த சம்பவம் தொடர்பக உடனடியான சரிபார்ப்பு நடவடிக்கையையும் மதிப்பீட்டையும் மேற்கொள்ளும். குறித்த இழப்பீடு பெறுவதற்கான தகுதி உறுதி செய்யப்பட்டவுடன், இழப்பீட்டுக்கான கோரிக்கைகள் தாமதமின்றி, பொதுவாக சரிபார்ப்புக்கப்பட்டு இடுத்த 72 மணி நேரத்திற்குள் செயற்படுத்தப்படுவதுடன், இழப்பீடு நேரடியாக விவசாயிக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய UNDP இன் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசுசா குபோட்டா, இந்த விடயத்தில் UNDP-யின் பங்களிப்பானது நிதி உதவிக்கு அப்பாற்பட்டது என்று வலியுறுத்தினார். “ இந்த காப்புறுதி முயற்சியின் அமைப்பு, விநியோகம் மற்றும் அணுகலை நாங்கள் வலுப்படுத்துகிறோம். அதற்காக விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர்களை இந்நடவடிக்கையில் திறம்பட ஈடுபடுத்துவதோடு குறித்த அத்திட்டம் தொடர்பில் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை ஆரம்பநிலை  தகவல் தொடர்பு பிரச்சாரங்கள் வாயிலாக நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலான முயற்சிகளையும் நாம் மேற்கொள்கின்றோம்,. உயிர்ப் பல்வகைமைக்கான நதி வழங்கல் உட்பட பரந்தளவில் UNDP மேற்கொள்ளும் இத்தகைய முன்முயற்சிகளின் கடந்தகால பணிகளை மீள் எழுச்சிபெறச் செய்வதன் மூலம், காப்பீட்டுத் திட்டத்தை தேசிய கொள்கை கட்டமைப்புகளுக்குள் கொண்டுசெல்வதற்கும், நிதி வழங்கல் உட்பட புதுமையான வழிமுறைகளை பரிசோதித்துப் பார்ப்பதற்கும் நாம் துணைபுரிகின்றோம், குறிப்பாக வாழிடங்களில் உயிர்களைப் பாதுகாப்பது மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்குவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு நாம் துணைபுரிகின்றோம்.”

உடனடி நிவாரணத்திற்கு அப்பால், வேட்டையாடும் சிறுத்தைகளைத் தடுக்கும் வகையிலான இரவு நேர அடைப்புகள், இரவு நேர தங்குமிடத்திற்கான பொது கால்நடை தொழுவங்கள் மற்றும் பண இழப்பீடுகளுக்குப் பதிலாக மாற்று விலங்குகளை வழங்கும் புதுமையான ‘கால்நடை வங்கி’ அமைப்பு போன்ற மாற்றுத் தீர்வு நடவடிக்கைகளை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. இந்த முயற்சிகள் கால்நடை இழப்புகளைக் குறைத்தல், ‘பழிவாங்கும் வகையிலான விலங்குக் கொலைகளைத் தடுத்தல்’ மற்றும் மக்களுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையில் சகவாழ்வை வளர்த்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வனவிலங்கு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் சங்கத்தின் தலைவர் கிரஹாம் மார்ஷல் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்: “நீடித்த பாதுகாப்பு என்பது மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பயனளிக்கும் நீண்டகால தீர்வுகளைச் சார்ந்துள்ளது. இந்த இழப்பீட்டுத் திட்டம் அத்தகைய வடிவிலான ஒரு முயற்சியாகும் – நடைமுறை ரீதியானதும், அறிவியல் அடிப்படையிலானதும் ஆகும். காலப்போக்கில் சமூகங்களுடன் நாம் உருவாக்கும் நம்பிக்கையில் அது வேரூன்றியுள்ளது.”

இதனுடன், இந்தத் திட்டத்தை அதன் கருத்தாக்கத்திலிருந்து செயல்படுத்தல் வரை வழிநடத்தும் WNPS-ன் செயற்றிட்டத் தலைவர் ஸ்பென்சர் மானுவல்பிள்ளை பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்: “இந்த முயற்சியானது ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கான உண்மையான தீர்வுகளாக மாற்றுவதற்கான WNPS இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது. LOLC–WNPS இணைந்து பல பிராந்தியங்களிலும் நடாத்திய சிறுத்தை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அத்தகைய திட்டத்தின் தேவை வெளிப்பட்டது, இது கால்நடைகளை வேட்டையாடுதலே மோதலின் முக்கிய காரணியாக இனங்காணப்பட்டது. இந்தப் பிரச்சினையை முடிவில்லாமல் விவாதிப்பதற்குப் பதிலாக, சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் உள்ள நீண்டகால சவாலை நிவர்த்தி செய்யும் ஒரு முன்னோடியான, நடைமுறைசார் பொறிமுறையை உருவாக்க நாம் செயற்பட வேண்டும் என்று களமிறங்கினோம், அதே நேரத்தில் அவற்றின் பாதுகாப்புக்காக தமது நிலங்களைப் பகிர்ந்து கொள்ளும் நலன்விரும்பிகளையும் நாம் ஆதரிக்கிறோம்.

பாதுகாப்பு என்பது இருவழிப் பாதையாகும்; சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கு மக்களுக்கு சிறுத்தைகள் அவசியமாகும். சிறுத்தைகளுக்குத் தமது உயிர்வாழ்வை உறுதி செய்ய மக்கள் தேவையாகும். இந்த முன்நகர்வானது கிராமப்புற வாழ்க்கையின் பொருளாதார யதார்த்தங்களை அங்கீகரித்து, பல்லுயிரியலை சமமாக மதிப்பிடுவதன் மூலம், வாழ்வாதாரங்கள் மற்றும் இலங்கையின் தனித்துவமான இயற்கை பாரம்பரியம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றது.