தாமரைக் கோபுரத்தில் பூகோள மரத்தளபாட புத்தாக்கத்தினை வெளியிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

இலங்கைக்கொரு மைல்கல் சாதனை

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே, ரென்னர் இடாலி உடன் இணைந்து, இலங்கையின் மிக ஆடம்பரமானதும் முன்னேற்றகரமானதுமான நீர் மைய மரத்தளபாட மேற்பூச்சு மெருகூட்டியினை அனுபவிக்க உயர்ரக விநியோகத்தர்கள் மற்றும் துறைசார் தலைவர்களை ஒருங்கே கொணர்ந்து, தனித்துவமான தாமரைக் கோபுரத்தில் புகழ்பெற்ற நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வானது உள்ளுர் மேற்பூச்சுத் துறையில் புத்தாக்கத்திற்கான மைல்கல்லை கட்டமைத்து,மறக்கமுடியாத அறிவு பகிரல், இடைத்தொடர்பாடல் வெளிப்பாடுகள், மற்றும் அதியுச்ச விருந்தோம்பல் என்பவற்றை நிகழ்த்தியிருந்தது. 

அன்றைய இரவின் முக்கிய நிகழ்வாக நவீன மரத்தளபாட உற்பத்திகளுக்கு அதிவிசேடமான நிறச்சாயல் நிலைத்தன்மை, தாங்குதிறன், மற்றும் நீண்டகாலத்திற்கு நிலைக்கும் அழகினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன புத்தாக்கத்தின் அறிமுகம் காணப்பட்டது. அதியுச்ச இலகுதன்மை மற்றும் ஆடம்பரமான மெருகூட்டலுக்காக உலகம் முழுதும் நன்கறியப்பட்ட ரென்னர் வாடர் பேஸ்ட் கோட்டிங்ஸின் – இத்தாலியின் முதற்தர வர்த்தகநாமமும் இலங்கையில் கிடைக்கக்கூடிய ஒரேயொரு இத்தாலிய மைய மரத்தளபாட மேற்பூச்சு வகைப்பாடுமான- அறிமுகத்தினையும் பங்கேற்பாளர்கள் அனுபவித்திருந்தார்கள். 

விருந்தினர்கள் நேரடி செய்துகாட்டல்களையும், தொழிநுட்ப அமர்வுகளது உதவிகளையும், நிபுணத்துவ கருத்துக்களையும் அதனைத் தொடர்ந்த உயர்ரக உணவு மற்றும் கொண்டாட்ட அனுபவங்கைளையும் அனுபவித்தனர். நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விரிவான தயாரிப்பு கோவை மற்றும் உயர்தர தீர்வுகளுக்காக வலுவான பராhட்டுதல்களை விநியோகத்தர்கள் வெளிப்படுத்தியிருந்ததுடன், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயுடன் நீண்டகால, நம்பிக்கைமிகு பங்குடைமையை பேணுவதிலான அவர்களது நம்பிக்கைiயும் மீளஉறுதிப்படுத்தியிருந்தனர். 

இந்நிகழ்வில் உரையாற்றுகையில்இ பிராந்திய தலைவரானஇ திரு. புதாதிட்யா முகர்ஜி அவர்கள்இ ‘இவ்வறிமுகமானது இலங்கையின் மரத்தளபாட மேற்பூச்சினில் புதிய யுகத்திற்கான ஆரம்பமொன்றாகும். இது அதிநவீன தொழிநுட்பத்தை வழங்குவதற்கும் எமது விநியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பெறுமதியை வளப்படுத்துவதற்குமான எமது அர்ப்பணிப்பினை வலுப்படுத்துகின்றது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர்இ திரு.வி. கிரிதரன் அவர்கள்இ ‘ரென்னருடனான எமது கூட்டிணைவுடன்இ இலங்கையின் அதிபுத்தாக்கமான மரத்தளபாட மேல்நிறப்பூச்சு வழங்குநராக ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயை இடம்பெறச்செய்ததில் நாம் பெருமையடைகின்றோம். இப்பங்குடைமையானது இலங்கை நுகர்வோர்களும் கைவினைஞர்களும் பூகோள தொழிநுட்பம்இ நிலைபேண் தீர்வுகள்இ மற்றும் புதிய துறைசார் தரநியமங்களை கட்டமைக்கும் முதற்தர மெருகூட்டிகளுக்கான அணுகலை பெற்றுள்ளமையை உறுதிப்படுத்துகின்றது.’ என்றார். 

ரென்னர் இடாலியினை பிரதிநிதித்துவப்படுத்திஇ திரு. மார்கோ அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்டார்: ‘உலகத்தரம் வாய்ந்த இத்தாலிய புத்தாக்கத்தினை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமகிழ்வடைகின்றோம். விநியோகத்தர்களது நேர்க்கணிய எதிர்வினையானது இச்சந்தையிலான ரென்னர் வாட்டர் பேஸ்ட் சொலுசன்களுக்கான வலுவான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது’.

ரென்னர்சின் நீர் மைய மேல்ப்பூச்சானது கலையுணர்விற்கும் அப்பால் விரிவாக்கமடைந்துள்ளது. அவை சுற்றுச்சூழல் நேயமிக்கதாகவும்இ தீங்கான வெளியேற்றங்களை குறைப்பனவாகவும்இ ஆரோக்கியமான உட்புற சூழலை மேம்படுத்துவதாகவும் – இலங்கையில் நிலைபேண் வாழ்நிலைக்காக அதிகரிக்கும் கேள்விகளுடன் மிகச்சரியாக பொருந்துவனவாக காணப்படுகின்றன. அவற்றின் தனிச்சிறப்பான தாங்குதிறனானது நீடித்துநிற்கும் மெருகினை உறுதிப்படுத்துவதுடன்இ கழிவுகளை குறைத்தும் பொறுப்புமிக்க நுகர்வினையும் ஊக்குவிக்கின்றது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது உலகத்தரம் வாய்ந்த தொழிநுட்பத்தை வழங்குவதாகவும்இ அலங்கார நிறப்பூச்சுகள்இ மரத்தளபாட மேல்நிறப்பூச்சுகள்இ மற்றும் துறைசார் மெருகூட்டிகளை அதிசிறப்பாக வடிவமைப்பதிலும் – இலங்கை சந்தையில் புத்தாக்கம்இ நிலைபேண்தன்மைஇ மற்றும் வாடிக்கையாளர் பெறுமதி என்பவற்றுக்கான புதிய தரநியமங்களை கட்டமைப்பதில்இ தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனும் காணப்படும்.