RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை: ராஜகிரிய

கொழும்பின் நகர்ப்புற மறுமலர்ச்சியின் மத்தியில், ஒரு உயர் தரம்வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வலயமாகவும், முதலீட்டு தளமாகவும் அதன்நிலையை பலப்படுத்துதல். அமைதியான மற்றும் வசதியான அடுக்குமாடிகுடியிருப்பு ஒரு காலத்தில் அமைதியான கொழும்பின் புறநகர்ப் பகுதியாக காணப்பட்ட  ராஜகிரிய, 2014-ல் RIUNIT ஆல் நடாத்தப்பட்ட சொத்து சந்தை  அறிக்கையில், மேற்கு மாகாணத்தின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் மிக உயர்ந்த வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாககுறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து, இப்பகுதி அதன் மூலோபாய நகர்ப்புற அருகாமை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தைப்பயன்படுத்தி, உயர் வளர்ச்சி சொத்து சந்தை மையமாக அதன் நிலையை பலப்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தத்தில், ராஜகிரிய சொத்து சந்தையில்சுமார் 2000 அடுக்குமாடி குடியிருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு நிலவரப்படி, சராசரி அடுக்குமாடி குடியிருப்பு விலைகள், 2ஆம் தரம் (Tier) அடுக்குமாடிகுடியிருப்புக்கள் சதுர அடி  ஒன்றுக்கு $183  மற்றும் 3ஆம் தரம்  (Tier) அடுக்குமாடி குடியிருப்புக்கள் சதுர அடி  ஒன்றுக்கு $123 எனபதிவாகியுள்ளது. இது தெஹிவளை (2ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புக்கள் – சதுர அடிக்கு $163 , 3ஆம் தரம் அடுக்குமாடிகுடியிருப்புக்கள் – சதுர அடிக்கு $114) போன்ற பிற புறநகர்ப் பகுதிகளை விட உயர்ந்த மதிப்பைக் கொண்டுள்ளது என்பது, உயர் தர நுகர்வோர் மத்தியில் விடுப்பைவெளிப்படுத்துகிறது. சந்தையில் விற்பனை விகிதங்கள் (Absorption) உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அதனடிப்படையில் 2ஆம் தரம்அடுக்குமாடி குடியிருப்புகளில் 97%மும், 3ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் 98%மும்  என விற்பனை விகிதாசாரங்கள்பிரதிபலித்திருக்கின்றன.  சிறந்த உள்கட்டமைப்பு, நீரால் சூழப்பட்ட மற்றும் பசுமையான சுற்றாடல் என்பன இதன் கிராக்கியை அதிகரிக்கின்றது. இவ்வாறு ராஜகிரிய சாதகமான சந்தை எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் நிலையில், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் ஆர்வமும்அதிகரித்துள்ளதுடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானர்கள் (Apartment developers), சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பிரிவில் தங்கள்கவனத்தை மேலும் அதிகரித்து வருகின்றனர். 2023ஆம் ஆண்டில் 2ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புக்களின் விநியோகம் 135% ஆக உயர்ந்து503 குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன. இது 2014க்குப் பின் பதிவான அதி உயர்ந்த விநியோக நிலையாகும். இதற்கு மாறாக, 3ஆம் தரம்அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை சாதாரணமாகவே அதிகரித்துள்ளது. கட்டட வேலைச் செலவுகள் மற்றும் இறக்குமதி வரிகள்அதிகரித்தமையானது, மலிவான வீட்டமைப்பின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. நெருக்கடிக்குப் பின்பான நிலையான வளர்ச்சியும் நிலச் சந்தையின் எழுச்சியும் ராஜகிரியவின் சொத்து சந்தையானது,  ஏனையவற்றை போலவே, 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட கடன் சுமையாலான பொருளாதாரவீழ்ச்சியின் மத்தியில், பலத்த சரிவைச் சந்தித்தது. இருப்பினும், அதன் குறிப்பிடத்தக்க மீட்சியானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைபுதுப்பித்துள்ளது. இந்தப் பகுதியின் நீடித்த ஈர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புறநகர்ப் பகுதிகளில் மலிவு விலை விநியோகத்தால் விரைவானமீட்சியைத் கண்டிருந்தாலும், ராஜகிரியவின் உயர்தர குடியிருப்பு நிலையும், மூலோபாய அமைவிடமும், இதன் அதிவிரைவான மீளெழுச்சிக்குவழிவகுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக ராஜகிரியவில் காணி விலை (இரண்டாம் காலாண்டு 2022) 48.7% ஆகவீழ்ந்தது. அதாவது ஒரு பெர்ச்சிற்கு $10,290 ஆக காணப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஒரு பெர்ச்சிற்கு $16,458 ஆக வலுவாக மீண்டுள்ளதானது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது. புறநகர் காணிவிலைகள் வேகமாக மீண்டு (Q4…

அல்சைமர் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சிறுவர்களுக்கான புத்தகத்தை அறிமுகப்படுத்தும் லங்கா அல்சைமர் பதனம்

டிமென்ஷியா நோயுடன் வாழ்ந்துவரும் நபர்கள் தொடர்பில் புரிதலை ஏற்படுத்துவதற்கும், அவர்கள் மீது பரிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னோடி சிறுவர் புத்தகமொன்று…

Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய 12KG Front Load சலவை இயந்திரங்களுடன் விரிவுபடுத்தும்Samsung Sri Lanka

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் மின்சாதன வர்த்தக நாமமான Samsung, தனது Bespoke சலவை வரிசையின் விரிவாக்கமாக புதிய12முபு குசழவெ டுழயன சலவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான 10.5KG மாதிரிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இப்புதிய சலவை இயந்திரங்கள் சிறிய அளவில் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. நவீன இலங்கைவீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இவை, உயர்தர தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப Samsung இன்புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. இப்புதிய 12KG Front Load சலவை இயந்திரங்கள் பெரிய துணிகளை கையாளும் வகையில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆடைகள், படுக்கைத் துணிகள் மற்றும் துவாலைகள் போன்ற அன்றாட சலவைக்கு சிக்கனமான தீர்வுகளை வழங்குகின்றன. மேம்பட்டஅம்சங்களுடன் கூடிய இந்த இயந்திரங்களில், விரைவான சலவைக்கான Super Speed, 70% வரை மின்சாரம் சேமிக்கும் AI Energy Mode போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், சிறந்த துணி பராமரிப்புக்கான Ecobubble மற்றும் ஆழமான சுகாதார சுத்தத்திற்கான hygienic clean ஆகியவை உள்ளன. இந்த தொடர் நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான செயல்திறனுடன் அன்றாட சலவையை மிகவும் திறமையாகவும்சிரமம் இன்றியும் மாற்றுகிறது. WD12D மாதிரி பிரத்தியேகமாக துணி உலர்த்தியுடனும் வருகிறது. இப் புதிய அறிமுகம் குறித்து Samsung Sri Lanka-வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘எங்களது 12KG Bespoke AI…

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியியல் பெறுபேறுகளை அடைந்துள்ளது

2025 ஏப்ரல் 4, கொழும்பு : ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2024ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதுடன், காப்புறுதித்துறை சந்தையின் முன்னணியாளர் என்ற…

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்தைகளில் அரசாங்கம் முன்வைத்த திட்டங்களை பாராட்டுவதுடன், ஆடைஏற்றுமதிக்கு சமமான சுங்க வரி நன்மைகளை எதிர்பார்க்கும் JAAF

வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்தியஇணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியைதெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தகஉறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரககுழுவினருக்கு JAAF தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகால வணிக கூட்டாளியாகதொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தத் தொழிற்துறை நேரடியாக 350,000 பேருக்கும், நாடு முழுவதும் மேலும்700,000 பேரின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக உள்ளது. எனவே, தற்போதுள்ள வர்த்தக சுங்க வரிகளை நீக்குவதற்கும், சர்வதேச வணிக சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் போட்டித்திறனை பராமரிப்பதற்கும் அரசாங்கம்மேற்கொள்ளும் முயற்சிகளை JAAF பாராட்டுகிறது. எந்தவொரு புதிய சுங்க வரி ஒப்பந்தத்தின் மூலமும், ஆடை உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கு வழங்கப்படும் வர்த்தகசலுகைகள் இலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் என JAAF எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக, தேசியபொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மற்றும் நெறிமுறை உற்பத்தி நடைமுறைகளுக்காக உலகளவில்பெயர் பெற்ற இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வெற்றியை கருத்தில்கொள்ளுமாறு JAAF இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு வணிக ஒப்பந்தத்தை நோக்கி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, இலங்கையின் ஆடைத் தொழிற்துறை உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் கண்காணிக்கும் திறன் (traceability), வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான சர்வதேச தரங்களை பின்பற்றுகிறது என JAAF மீண்டும்வலியுறுத்துகிறது. எனவே, இலங்கைக்கு சிறப்பு சுங்க வரிச் சலுகைகள் வழங்கும் போது இந்த அர்ப்பணிப்பை கருத்தில்கொள்ள வேண்டும் என்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது. சர்வதேச வணிக சந்தையில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர்மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றுடன், பொறுப்பான முறையில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குஇலங்கை நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான இலக்கு என்பதில் JAAF உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.இரண்டு அரசாங்கங்களுக்கிடையே தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்து JAAF நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது. வணிகத்தை விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈர்க்கவும், இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தரக்கூடிய எதிர்கால வணிகஒப்பந்தத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்த மன்றம் தெரிவித்துள்

மூலோபாய வங்கிக்காப்புறுதி பங்குடைமையில் இணையும் HNB பொதுக்காப்புறுதி மற்றும் யூனியன் வங்கி

HNB பொதுக் காப்புறுதியானது புத்தாக்க காப்புறுதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு  குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மூலோபாய வங்கிக்காப்புறுதி உடன்படிக்கை ஊடாக யூனியன் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இப்பங்குடைமையானது வங்கியின்…

அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன் இணையும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குநரான HNB FINANCE, ஒரு நவீன மைய வங்கி அமைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு, டிஜிட்டல் நிதித் தீர்வுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Kiya.ai உடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டது. HNB FINANCEஇன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தைமேம்படுத்தவும், அனைத்து ATM இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு சேர்வு மூலம், CASA (Current and Savings Accounts), Trade Finance மற்றும் திரைசேரி செயல்பாடுகள் போன்ற அடிப்படை வங்கிநடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக Kiya.ai மூலம் உருவாக்கப்பட்ட புதிய டிஜிட்டல் Core Banking System செயல்படுத்தப்படும். SaaS (Software as…

Eco Go Beyond 2024 Awards நிகழ்வில் இலங்கையின்எதிர்கால நிலைத்தன்மை முன்னோடிகளை சிறப்பித்த MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கானதன்னுடைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிகழ்வு ஏப்ரல் 4, 2025 அன்று துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில்நடைபெற்ற MAS Eco Go Beyond நிலைத்தன்மைக் கல்வி நிகழ்ச்சி 2024 விருது வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றது. இளைஞர்களின் சிறந்த நிலைத்தன்மை சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்வில், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) தலைவி பிரியானி அமரசிங்க மற்றும் GEF Small Grants Programme இன் தேசிய வழிகாட்டு குழுத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகபங்கேற்றனர். கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில்கலந்து கொண்டனர். ஓராண்டு நீண்ட பயணத்தின் உச்சக்கட்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது. இந்தப் பயணத்தில் பட்டறைகள், பயிற்சித்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முயற்சிகள் என்பன அடங்கியிருந்தன. இவை உள்ளூர் சமூகங்களில்சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை. MAS Holdings நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்த Eco Go…

இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன்சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB

வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளைவெல்லும் வாய்ப்பை வழங்குகிறது இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட்கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைவழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட்உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளைவெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்குஅசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட்உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.…

இலங்கையில் அறிமுகமாகும் ஐவி குளோபல் கெம்பஸ்

உள்ளுர் திறமைகளுக்கும் உலகளாவிய வாய்ப்புக்களுக்கும் ஒரு பாலமாகின்றது ஐவி குளோபல் கெம்பஸ் இலங்கையில் சர்வதேச மூன்றாம்நிலை கல்வியின் நிலைமாறு பாய்ச்சலொன்றினை குறிக்கும்விதமாக…