தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வே

இலங்கையின் முன்னணி நிறப்பூச்சு தயாரிப்பாளரான, ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது, அங்கொடை தேசிய மனநல நிறுவகத்தின் உளவியல் அலகில் நிலைமாறு வர்ணப்பூச்சு செயற்றிட்டத்தினை முன்னெடுத்தமையினால் சமுதாய…

SDB இன் தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக ஆளுமைமிக்க வங்கியலாளரானசிட்ரல் டி சில்வா

SDB வங்கியானது அதன் பெருநிறுவன முகாமைத்துவ அணியின் Deputy General Manager/Chief Business Officer ஆக  திரு. சிட்ரல் டி சில்வா அவர்களின் நியமனத்தினை அறிவிப்பதில் பெருமிதமடைகின்றது. வங்கியியல் துறையில் நான்கு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட தனித்துவமான தொழில் அனுபவத்துடன், திரு. டிசில்வா அவர்கள் நிலைமாறு வளர்ச்சியினை முன்னெடுப்பதில் அனுபவ செல்வத்தினையும் நிருபிக்கப்பட்டசாதனைகளையும் ஒருங்கே கொணர்கின்றார்.  திரு. டி சில்வா அவர்களது புகழ்மிக்க தொழிற்பயணமானது அவர் வங்கியியல் செயற்பாடுகளில் தன்னுடையதிறன்களை தீட்டிக்கொண்ட, டொய்சு வங்கியிலிருந்து ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் நிறுவனத்தின்வெற்றிக்காக அதிமுக்கிய பங்குவகித்த, செலான் வங்கியில் சிரேஷ்ட தலைமைத்துவ பாகத்தினை வகித்தார். கிளை வங்கியியல் செயற்பாடுகள், அபிவிருத்தி வங்கியியல், மீளப்பெறல்கள், பணவலுப்பல் மற்றும் மூலோபாயவியாபார பெறுபேறுகளை விநியோகித்தல் என்பன அவரது நிபுணத்துவமிக்கப் பகுதிகளை உள்ளடக்குகின்றன. மரபார்ந்த வங்கியியலிற்கு அப்பால், திரு. டி சில்வா அவர்கள் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் வாடிக்கையாளர்மைய தீர்வுகளில் கவனம்செலுத்தும், சிலிக்கன் வெளியை மையமாகக் கொண்ட தகவல் தொழிநுட்பகம்பெனியான இமோஜிட் உடன் வியாபார அபிவிருத்திக்கான அவரது ஆலோசனை வழங்கலின் ஊடாகதன்னுடைய தகவமைத்துக்கொள்ளல் மற்றும் புத்தாக்க சிந்தனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.  அவரது தொழிற்பயணத்தின் முழுமையிலும், திரு. டி சில்வா அவர்கள் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தல், இலாபத்தினை வளப்படுத்தல், மற்றும் மூலோபாய புத்தாக்கங்களை துணிவுடன் முன்னெடுத்தல் என்பவற்றைஉள்ளடக்கி தொடர்ச்சியாக அதிசிறப்பான பெறுபேறுகளினை வெளிப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் வங்கியியல்தீர்வுகளை அமுல்படுத்தல், செயற்பாட்டு வினைத்திறனை முறைப்படுத்தல், மற்றும் பலமான வாடிக்கையாளர்ஈடுபாட்டினை வளர்த்தல்களிலான அவரது அனுபவமானது SDB வங்கிக்கான ஒரு பெறுமதிமிக்க சொத்தாகஅவரை நிலைப்படுத்துகின்றது.  SDB வங்கியானது புத்தாக்க நிதிசார் தீர்வுகளின் ஊடாக சமுதாயங்களை வலுப்படுத்தும் தனது நோக்கத்தினில்தொடர்ந்தும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. பெருநிறுவன முகாமைத்துவ அணியிலான திரு. டிசில்வா அவர்களது இணைவானது அதனது தலைமைத்துவத்தினை வலுப்படுத்துவதிலும் அதனதுபங்குதாரர்களிற்கு இணையற்ற பெறுதியினை வழங்குவதிலுமான வங்கியின் அர்ப்பணிப்பினைவெளிப்படுத்துகின்றது.