இலங்கையின் பொதுக் காப்புறுதி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HNB General Insurance Limited (HNBGI), இலங்கை காப்புறுதி கல்வி நிறுவகத்தின்…
Year: 2025
10வது பந்தயத்திற்காக வெற்றிகரமாக மீளவந்த வளவை சுபர்க்ரோஸ் மூலம் மோட்டார் பந்தயத்தில் மைல்கல்லை எட்டச்செய்த ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே
ஐந்து வருட காத்திருப்பின் பின்னர் மாபெரும் வெற்றியினை உருவாக்கி, இலங்கையின் மிகமுக்கிய மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக மீளவும் வெற்றிபெற்றுள்ளது ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே…
நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்
‘வாழ், காதலி, சிரி’ என்ற கோட்பாட்டை உண்மையாக கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி இருப்பவர்களும் அதை தனிப்பட்ட வாழ்வில்மட்டுமே வைத்திருப்பர். ஆனால் நிம்னா மற்றும் இசுரு (@nimnastiktok)) என்ற TikTok ஜோடி, தங்களது அன்றாட வாழ்வின்தனித்துவங்களையும், அவர்களிடையே உள்ள இயல்பான புரிதலையும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியாக பகிர்ந்துவருகின்றனர். சிலர் அவர்களை வேடிக்கையான, வேகமான காணொளிகளுக்காக அறிவர். மற்றவர்கள் தம்பதி உள்ளடக்கத்தில் விளம்பரங்களைஎளிதாக இணைக்கும் திறனுக்காக அறிவர். ஆனால் அவர்களை அறிந்த எவரும் சொல்வர் – அந்த குரல்தான் சிறப்பு. அந்த தனித்துவமான கீச்சுக்குரல், வேகமாக்கப்பட்ட தொனி, இப்போது அவர்களின் அடையாளமாக மாறிவிட்டது. நிம்னா மற்றும் இசுருவை அறிந்திருந்தால், அவர்களின்முகங்களைக் காணும்போதே அந்த குரலை தங்கள் மனதில் கேட்க முடியும். நிம்னா கண்டியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி. இசுரு குருநாகலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். இருவரும்பாரம்பரியமான பாதையில் நிலையான வேலைகளுடன் இருந்தனர். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில்வெறும் ஆர்வத்தினாலும், சிறிது சலிப்பினாலும் TikTok இல் வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். அவர்களின் ஆரம்பகால வீடியோக்கள்சாதாரண தம்பதி தருணங்களைக் காட்டின. வேடிக்கையான விவாதங்கள், கிண்டல்கள், விளையாட்டான உரையாடல்கள். இவை திரைக்கதைஇல்லாமலேயே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலித்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அவர்களை உண்மையில்பிரபலமாக்கிய காரணம் முற்றிலும் எதிர்பாராதது. ஒரு நாள் மிக நீளமான வீடியோவை TikTok இன் கால வரம்பிற்குள் கொண்டு வர, அதை குறைக்காமல் வேகப்படுத்த முடிவு செய்தனர். இந்ததற்செயலான முடிவின் விளைவாக உருவான கீச்சுக் குரல் எதிர்பாராத வகையில் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த குரல்வீடியோக்களுக்கு நகைச்சுவை சேர்த்து, விரைவில் அவர்களின் அடையாளமாக மாறியது. காலப்போக்கில், இந்த உயர் குரல் வடிகட்டிஅவர்களின் வர்த்தகநாமத்தின் தனித்துவமான அம்சமாக மாறி, உள்ளடக்கம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக மாறும் சூழலில் அவர்களைவேறுபடுத்திக் காட்டியது. இப்போது அவர்களின் உண்மையான குரல்களைக் கேட்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பானதருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாடகணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்த ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில்வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும், உண்மைத்தன்மையை பராமரிப்பதில்அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பானதருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாடகணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில்வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும் உண்மைத்தன்மையை பராமரிப்பதில்அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் சிறந்த முகாமையாளர்கள் விருதுகள் விழாவில் தேசிய அங்கீகாரத்துடன் தலைமைத்துவச் சான்றுகளை வலுப்படுத்திய HNB பொது காப்புறுதி
HNB பொதுக் காப்புறுதியானது கொழும்பு லீடர்சிப் அகாடமியினால் ஒழுங்கமைக்கப்பட்ட, பெருமைமிகு சிறந்த முகாமையாளர் விருதுகள் 2024 இல் அதனது இரு சிரேஸ்ட முகாமையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்க தனித்துவமான தலைமைத்துவத்தினை…
City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் – கொண்டாட்டங்கள்திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்கஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக, அவரதுகட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், திரு. ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் City of Dreams Sri Lanka-வின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திரு. கானை வரவேற்பதற்காக நீங்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள்எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்ததை எங்களாலும் நன்கு உணர முடிகிறது. அவரது ஆதரவுக்கும் நல்லெண்ணத்திற்கும்நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறோம், மேலும் எதிர்காலத்தில் திரு. கானை City of Dreams Sri Lankaவுக்குவரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஷாருக்கான் வருகை ரத்தாகியிருந்தாலும்,…
சிறப்புக்களை கொண்டாடுதல்: வருடாந்த வியாபார விருதுகளில் ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி
SDB வங்கியானது 2024 ஆம் ஆண்டிலான குறிப்பிடத்தக்க செயலாற்றுகைகளுக்காக அதனது ஊழியர்களது அதிசிறப்பான பங்களிப்புக்களை கௌரவிக்கவும் பாராட்டவுமாக அதனது பெருமைமிகுந்த SDB வங்கி வருடாந்த வியாபார விருதுகள் விழாவினை…
வளவை சுபர்க்ரோஸ் 2025 பிரதான அனுசரனையாளராக இலங்கையின் மோட்டார் பந்தயத்தில் புதிய அத்தியாயத்தினை வலுவூட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே
இலங்கையின் முதல்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு கம்பெனியான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளவை சுபர்க்ரோஸ் 2025 இற்கான பிரதான அனுசரனையாளர் எனும் அதன்…
John Keells Properties மற்றும் NDB வங்கி இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் மிகக் குறைந்த வட்டி வீதத்துடனான வீட்டுக்கடன் வசதி – VIMAN Ja-Ela க்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது
கொழும்பு, இலங்கை. இலங்கையில் சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் துணிச்சலான ஒரு நகர்வாக, John Keells Properties ஆனது NDB வங்கியின் கூட்டாண்மையுடன் 9.75% என்ற சந்தையில் கிடைக்கும் மிகக்…
லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்றதம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு
Ceylon Tea என்ற பெயருடன் பிணைந்த அந்த இதிகாசத்தை நினைவுகூரும் போது, சர் தோமஸ் லிப்டனின் பெயர் என்றென்றும் மறக்கப்பட மாட்டாது.…
7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில் நிலையான முடிவுகளை வழங்கும் சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2025 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவைகள்…