கண்டியில் உள்ள முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான சுவசெவனமருத்துவமனை, இலங்கை இராணுவத்திற்கான ‘சுவசெவன காப்புறுதித் திட்டத்தின்’ கீழ் இராணுவ வீரர்களுக்குசலுகை அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக இலங்கை இராணுவத்துடன்கைகோர்த்துள்ளது. இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம், தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை ஆதரிப்பதில் சுவசெவனவின்உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தின் சார்பாக பிரிகேடியர் பெனாண்டோ, மேஜர்தனுஷ்க குமார மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் பிரேமச்சந்திர ஆகியோர் கைச்சாத்திட்ட அதே நேரத்தில்சுவசெவன மருத்துவமனை வணிக மேம்பாட்டுத் தலைவர் ஸ்ரீமத் வெலிவிட்ட, சந்தைப்படுத்தல் நிர்வாகி மிஸ்லக்ஷானி பெரேரா மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி அஷான் பிரேமச்சந்திர ஆகியோர் மருத்துவமனையைபிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இராணுவ உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரத்தியேகசலுகைகளை வழங்கும், தரமான மருத்துவ சேவைக்கான உயர்ந்த அணுகலை சுவசெவன மருத்துவமனை உறுதிசெய்யும்.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், சுவசஹன காப்புறுதித் திட்ட உரிமையாளர்களுக்கு இதில் இணைவதற்கானஆரம்ப கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதோடு, OPD வருகைகளுக்கான இலவச ஆலோசனைகள் மற்றும்பல்வேறு மருத்துவ சேவைகளில் முக்கிய தள்ளுபடிகள் ஆகியன வழங்கப்படும். CT Scans, MRI, Mammograms, X-rays, Ultrasounds உள்ளிட்ட ஆய்வக சோதனைகள் மற்றும் கதிரியக்க சேவைகளில் 20% தள்ளுபடியுடன்கூடிய கட்டணக் கழிவு வழங்கப்படும். ECHO மற்றும் ECG சோதனைகளுக்கும், உள்நோயாளி பராமரிப்புக்கானஅறைகளுக்கான கட்டணங்களுக்கும் இதே தள்ளுபடி வழங்கப்படும். அது மாத்திரமன்றி, இருதய பைபாஸ்அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ரூ. 50,000 தள்ளுபடி மூலம் பயனடைவார்கள். அதே நேரத்தில்மருத்துவமனையிலிருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் இலவச அம்பியூலன்ஸ் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சுவசெவன மருத்துவமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரிநளின் பஸ்குவல், “இலங்கை இராணுவம் எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை ஆற்றியுள்ளது. மேலும் இந்த முயற்சியின் மூலம் அவர்களின் சுகாதாரத்தேவைகளை ஆதரிப்பது எமது பாக்கியமாகும். சுவசெவன மருத்துவமனை ஆகிய நாம், உயர்தரம் மிக்க, அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளோம். அத்துடன் இந்த கூட்டாண்மைஎமது நாட்டிற்கு சேவை செய்பவர்களுக்கு நாம் சேவை செய்வது தொடர்பில் கொண்டுள்ள தொடர்ச்சியானஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.
சுவசஹன நலன்புரி காப்புறுதித் திட்டம் ஆனது, இராணுவ வீரர்களுக்கு விரிவான மருத்துவ மற்றும் நிதிஉதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான சுகாதார முயற்சியாகும். இந்தத் திட்டம்மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், கடுமையான நோய்கள் மற்றும் அவயவம் செயலற்றுப் போதல் தொடர்பானசெலவுகளுக்கு காப்புறுதிகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சேவைஆற்றுபவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது.
சுவசெவன மருத்துவமனை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நோயாளர்பராமரிப்புடன், கண்டியில் சுமார் நான்கு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நம்பகமான பெயராகதிகழ்ந்து வருகிறது. மிக வசதியாக நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, உயர் பயிற்சி பெற்றநிபுணர்களின் குழு மூலம் முழு அளவிலான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இலங்கையின்மலைநாட்டுத் தலைநகரில் ஆறுதளிக்க்கும் வகையிலும், நோயிலிருந்து மீட்சி பெறவுமாக வடிவமைக்கப்பட்ட150 சொகுசான, தரமான அறைகளுடன், மருத்துவச் சிறப்பின் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதில் சுவசெவனஉறுதிபூண்டுள்ளது.