இலங்கையில் அறிமுகமாகும் ஐவி குளோபல் கெம்பஸ்

உள்ளுர் திறமைகளுக்கும் உலகளாவிய வாய்ப்புக்களுக்கும் ஒரு பாலமாகின்றது

ஐவி குளோபல் கெம்பஸ் இலங்கையில் சர்வதேச மூன்றாம்நிலை கல்வியின் நிலைமாறு பாய்ச்சலொன்றினை குறிக்கும்விதமாக தன்னுடைய கதவுகளை உத்தியோகப்பூர்வமாக திறந்துள்ளது. முன்னணி உலகளாவிய உயர் கல்வி வழங்குநராகும் நோக்குடன், சர்வதேச சந்தைகளில் சிறந்து விளங்க மாணவர்களுக்கு வலுவூட்டும் உலகத்தரம் வாய்ந்த கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தொழிற்சார் பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.  

அறிமுக நிகழ்வானது கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சமீபத்தில் இடம்பெற்றதுடன் கலாநிதி வின்யா எஸ்.ஆரியரத்ன, தலைவர் – இலங்கைக்கான சர்வோதய இயக்கம், கலாநிதி அஜித் பொல்வத்த, பதில் பிரதி பணிப்பாளர் – பொது மூன்றாம்நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழு, பேரா.சமத் தர்மரத்தன, சமுதாய மருத்துவத்தின் தலைமை பேராசியர் – பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியோரை உள்ளடக்கிய தனித்துவமிக்க சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பினால் கௌரவப்படுத்தப்பட்டது. 

சிங்கப்பூர் கல்வி உன்னதங்களில் வேர்கொண்டுள்ள, நிறுவனமானது, சர்வதேச தகுதிகள் மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கான பன்முகப்பட்ட பாதைகளினை உறுதிப்படுத்துவதற்காக, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் அதற்குகப்பாலுமாக பெருமைமிகு பல்கலைக்கழங்களுடன் கைகோர்க்கின்றது. 

 “ஐவி குளோபல் கெம்பசில், உலகின் எப்பாகத்திலும் வெற்றிப்பெறுவதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தும் உண்மையான அனுபவத்தினை மாணவர்களிற்கு வழங்கி, கல்வியில் காணப்படும் எல்லைகளை தகர்ப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றோம். பிரகாசமான எதிர்காலத்துக்கு இட்டுச்செல்லும் உலகத்தரமான கற்றல், துறைசார் வெளிப்படுத்தல்கள் மற்றும் தொழிற்சார் வழிப்படுத்தல்களில் ஒவ்வொரு மாணவருக்குமான அணுகலை உறுதிப்படுத்தி, சர்வதேச வாய்ப்புக்களுடன் உள்ளுர் திறன்களை இணைப்பது எமது பணியாகின்றது.” என்கிறார் ஐவி குளோபல் கெம்பசின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. அர்ஷாத் ரெபை அவர்கள். 

ஐவி குளோபல் கெம்பசானது சர்வதேச வெற்றிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வடிவமைக்கப்பட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் பன்முக மட்டங்களை வழங்குகின்றது. இவை அத்தியாவசிய கல்வி மற்றும் தொழிற்சார் திறன்களை வளர்க்கும் அடிப்படை நிகழ்ச்சித்திட்டங்கள், வியாபாரம், தகவல் தொழிநுட்பம், சந்தைப்படுத்தல், விருந்தோம்பல் போன்றவற்றில் விசேடத்துவமான டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் சுய அனுபவங்களுக்கு முக்கியத்துவமளிப்பவை, மற்றும் சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளிலான பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைவுடன் இளமாணி மற்றும் முதுமாணி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கி,மாணவர்களிற்கு அவர்களது உயர் கல்வியினை உலகளாவிய ரீதியில் நிறைவு செய்வதற்கான பல்வேறு பாதைகளை வழங்குகின்றது. 

மேலதிகமாக, ஐவி குளோபல் கெம்பஸ் மாணவர்கள் உலகளவில் அதிக போட்டித்தன்மை கொண்ட துறைகளில் வெற்றிபெறுவதற்கு தேவைப்படும் திறன்கள் மற்றும் வலையமைப்புக்களை பெறுவதனை உறுதிப்படுத்தி, ஐவி கேரியர் கெம்பஸ் ஊடாக தொழில் மைய வழிக்காட்டுதல்களையும் வழங்குகின்றது. 

கலப்பு கற்றல் மாதிரி ஊடாக, ஐவி குளோபலானது உண்மை நேர கலப்பு கற்றலை அனுமதித்தும் உள்ளுர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான அணுகலை உறுதிப்படுத்தியும், அதனது வகுப்பறைகளுக்குள் அதிநவீன தொழில்நுட்பத்தினை ஒருங்கிணைக்கின்றது. இந்நிறுவனமானது தகுதியான குறைந்த வருமானம் பெறுகின்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்களுடன் ஆதரவளிப்பதுடன் பணிப்பயிற்சிகள், வலையமைப்பாக்க வாய்ப்புக்கள் மற்றும் பணியிட தேர்வுகள் என்பவற்றை வழங்குவதற்காக முன்னணி நிறுவனங்களுடனும் கைகோர்க்கின்றது. மேலும், அதனது தொழில்வாண்மை சுழலானது சுயதொழில் மற்றும் தலைமைத்துவம் போன்ற கலாச்சாரங்களை வளர்ப்பதற்காக வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், துவக்க பொறிமுறைகள், மற்றும் புத்தாக்க ஆய்வுகூடங்கள் என்பவற்றை வழங்குகின்றது. இதனது உலகளாவிய இணைப்பு மற்றும் எதிர்கால மைய அணுகுமுறையுடன், ஐவி குளோபல் கெம்பசானது இலங்கையிலும் அதற்கப்பாலும் சர்வதேச கல்வியில் புதிய நியமங்களை விதித்துச்செல்கின்றது. 

ஐவி குளோபல் கெம்பஸ் இல.141, காலி வீதி, தெஹிவளையில் அமைந்துள்ளது. ஐவி குளோபல் கெம்பஸ் குறித்தும் அதனது நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் மேலும் அறிந்துக்கொள்ள  www.ivyglobalcampus.comஅல்லது மின்னஞ்சல் வாயிலாக info@ivyglobalcampus.com அல்லது  தொலைபேசியில் 011 2721234 ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.