வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்தியஇணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியைதெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தகஉறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரககுழுவினருக்கு JAAF தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகால வணிக கூட்டாளியாகதொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தத் தொழிற்துறை நேரடியாக 350,000 பேருக்கும், நாடு முழுவதும் மேலும்700,000 பேரின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக உள்ளது. எனவே, தற்போதுள்ள வர்த்தக சுங்க வரிகளை நீக்குவதற்கும், சர்வதேச வணிக சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் போட்டித்திறனை பராமரிப்பதற்கும் அரசாங்கம்மேற்கொள்ளும் முயற்சிகளை JAAF பாராட்டுகிறது. எந்தவொரு புதிய சுங்க வரி ஒப்பந்தத்தின் மூலமும், ஆடை உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கு வழங்கப்படும் வர்த்தகசலுகைகள் இலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் என JAAF எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக, தேசியபொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மற்றும் நெறிமுறை உற்பத்தி நடைமுறைகளுக்காக உலகளவில்பெயர் பெற்ற இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வெற்றியை கருத்தில்கொள்ளுமாறு JAAF இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு வணிக ஒப்பந்தத்தை நோக்கி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, இலங்கையின் ஆடைத் தொழிற்துறை உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் கண்காணிக்கும் திறன் (traceability), வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான சர்வதேச தரங்களை பின்பற்றுகிறது என JAAF மீண்டும்வலியுறுத்துகிறது. எனவே, இலங்கைக்கு சிறப்பு சுங்க வரிச் சலுகைகள் வழங்கும் போது இந்த அர்ப்பணிப்பை கருத்தில்கொள்ள வேண்டும் என்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது. சர்வதேச வணிக சந்தையில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர்மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றுடன், பொறுப்பான முறையில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குஇலங்கை நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான இலக்கு என்பதில் JAAF உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.இரண்டு அரசாங்கங்களுக்கிடையே தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்து JAAF நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது. வணிகத்தை விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈர்க்கவும், இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தரக்கூடிய எதிர்கால வணிகஒப்பந்தத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்த மன்றம் தெரிவித்துள்
Year: 2025
மூலோபாய வங்கிக்காப்புறுதி பங்குடைமையில் இணையும் HNB பொதுக்காப்புறுதி மற்றும் யூனியன் வங்கி
HNB பொதுக் காப்புறுதியானது புத்தாக்க காப்புறுதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மூலோபாய வங்கிக்காப்புறுதி உடன்படிக்கை ஊடாக யூனியன் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இப்பங்குடைமையானது வங்கியின்…
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன் இணையும் HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குநரான HNB FINANCE, ஒரு நவீன மைய வங்கி அமைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு, டிஜிட்டல் நிதித் தீர்வுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Kiya.ai உடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டது. HNB FINANCEஇன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தைமேம்படுத்தவும், அனைத்து ATM இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு சேர்வு மூலம், CASA (Current and Savings Accounts), Trade Finance மற்றும் திரைசேரி செயல்பாடுகள் போன்ற அடிப்படை வங்கிநடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக Kiya.ai மூலம் உருவாக்கப்பட்ட புதிய டிஜிட்டல் Core Banking System செயல்படுத்தப்படும். SaaS (Software as…
Eco Go Beyond 2024 Awards நிகழ்வில் இலங்கையின்எதிர்கால நிலைத்தன்மை முன்னோடிகளை சிறப்பித்த MAS
உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கானதன்னுடைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிகழ்வு ஏப்ரல் 4, 2025 அன்று துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில்நடைபெற்ற MAS Eco Go Beyond நிலைத்தன்மைக் கல்வி நிகழ்ச்சி 2024 விருது வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றது. இளைஞர்களின் சிறந்த நிலைத்தன்மை சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்வில், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) தலைவி பிரியானி அமரசிங்க மற்றும் GEF Small Grants Programme இன் தேசிய வழிகாட்டு குழுத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகபங்கேற்றனர். கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில்கலந்து கொண்டனர். ஓராண்டு நீண்ட பயணத்தின் உச்சக்கட்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது. இந்தப் பயணத்தில் பட்டறைகள், பயிற்சித்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முயற்சிகள் என்பன அடங்கியிருந்தன. இவை உள்ளூர் சமூகங்களில்சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை. MAS Holdings நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்த Eco Go…
இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன்சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB
வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளைவெல்லும் வாய்ப்பை வழங்குகிறது இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட்கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைவழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட்உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளைவெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்குஅசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட்உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.…
உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள்…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா நான்காவது தடவையாக தெரிவு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவாகியுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (31) நடைபெற்றபோது…
தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக மீனவர்கள் குழு இலங்கை விஜயம் – தமிழக ஊடகங்கள் தகவல்
மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐந்து தமிழக மீனவர்கள் கொண்ட குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்…
இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுர குமார திசாநாயக்கவும் விஜித ஹேரத்தும் பாதுகாப்பார்களா? – நாமல் கேள்வி
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்…
நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது “முஃபாசா: த லயன் கிங்”
“முஃபாசா: த லயன் கிங்” திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி டிஸ்னி+ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் (OTT…