தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கைக்கு பரிய வெப்ப அச்சுறுத்தல் ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பக் குறியீடு வெப்பநிலை அதிகரிப்பை மட்டும் குறிப்பதில்லை, ஆனால் அது உண்மையில் மக்கள் உணரும் வெப்பத்தின் அளவைக் குறிக்கிறது’ என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அதிக ஈரப்பதம் காரணமாக,வியர்வை வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுவதில்லை, அதனால் பொது மக்கள் அசௌகரியமான நிலையை எதிர்கொள்ளுகின்றனர். இலங்கையையை நோக்கி வீசும் காற்றின் வேகம் குறைந்துள்ளது .அதனால் வெப்பம் அதிகமாக உணரப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைவாக நேற்று முன்தினம் பிற்பகல் ,இரத்தினபுரியில் 37.4 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் மகா இலுப்பலம் ஆகிய இடங்களிலும் 33 பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பது வழமை என திணைக்களம் தெரிவித்துள்ளது.