UGC அனுமதி வழங்குவது, பட்டமளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்

இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படும் போது அவை பல்வேறு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதனை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் வழங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (12) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட குழு தொழில்வாண்மையாளர்கள் மற்றும் சங்கங்களை அழைத்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி மொஹான் லால் கிரேரு மற்றும் எம்.எம்.எம். முஸ்தபா, மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை – ஜேர்மன் தொழிநுட்பப் பயிற்சி நிலையம், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம், றோயல் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜீ.டீ. பண்டார ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) மற்றும் அத்துடன் இணைந்த உயர் தொழிநுட்ப நிறுவனம் (ATI) என்பவற்றின் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேபோன்று, உயர் தர பெறுபேறுகள் கிடைத்தல் மற்றும் பல்கலைக்கழக நுழைவு என்பவற்றுக்கிடையிலான காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாகப் பயன்படுத்தத் தேவையான பொறிமுறையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்தது. மேலும், உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பட்டங்கள் வழங்கும் பல்வேறு நிறுவங்களை ஒழுங்குபடுத்தும் தேவை தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அறம்பெபோல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ ஏ. அரவிந்த குமார் மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன