latest news

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று (02)  மற்றும்(03) நாளை தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இந்தியாவின் ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் இன்று (02)  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் …

மீனவர்களுக்கு எச்சரிக்கை Read More »

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார். அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் …

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து Read More »

விமானத்தில் திருட்டுத்தனமாக இருந்தமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – விசேட விசாரணைக்கு நீதவான் உத்தரவு

தேசிய பாகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இரகசியமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசித்து  ஜப்பானுக்கு செல்லவிருந்த விமானத்தில் அமர்ந்திருந்த போது  கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் திரு இந்திக சில்வா இன்று உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வத்தளை ஹெந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கி நிதியுதவியின் கீழ் இரத்தினபுரி புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்

உலக வங்கி நிதியுதவியின் கீழ் 123 மில்லியன் ரூபா செலவில் இரத்தினபுரி புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணி நேற்று முந்தினம்(30) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் ஆரம்பமானது. இரத்தினபுரி போதானா வைத்தியசாலையின் வளாகத்தில் மேற்படி ஐந்து மாடிகளை கொண்ட புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்த திட்டம்

எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரி முறைமைகளை அறிமுகப்படுத்த நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைவாக , வரி ஏய்ப்பு செய்யும் தொழிலதிபர்களை குறிவைத்து இந்த புதிய வரி முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பல நிறுவனங்களை நடத்தும் வர்த்தகர்கள் வரி செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் நிதியமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது. இவ்வாறான வரி ஏய்ப்பு காரணமாக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 300 …

வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்த திட்டம் Read More »

சீரற்ற கால நிலையினால் 15,496 பேர் பாதிப்பு

சீரற்ற கால நிலையினால் 15496 பேர் பாதிப்பு தற்போது நிலவும் சீரற்ற கால நிலையினால் இன்று (02) காலை 06.00 மணியுடனான காலப்பகுதியில் 3,672 குடும்பங்களைச் சேர்ந்த 15,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 376 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவில் கடும் வெள்ளம் காரணமாக வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.சீரற்ற கால நிலையினால் கம்பஹா மாவட்டமே …

சீரற்ற கால நிலையினால் 15,496 பேர் பாதிப்பு Read More »

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை 03ஆம் திகதி கூடுகிறது. பாராளுமன்றம் அமர்வு எதிர்வரும் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 2023 ஒக்டோபர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் …

பாராளுமன்றம் நாளை கூடுகிறது Read More »

‘ஜனாவின் வாக்குமூலம்’  மணிவிழா மலர் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான, கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் 60 வது பிறந்த நாளில் ‘ஜனாவின் வாக்குமூலம்’ எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு நேற்று மாலை (02) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி …

‘ஜனாவின் வாக்குமூலம்’  மணிவிழா மலர் வெளியீடு Read More »

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 02.10.2023

இலங்கை நகரங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.