கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி.ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (08) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான மின்கட்டணம் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக செலுத்தப்படவில்லை எனவும், மொத்த நிலுவைத் தொகை 6 இலட்சம் ரூபா எனவும் மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகர சபை கலைக்கப்பட்ட பின்னர் மேயர் சட்டவிரோதமாக மேயர் வீட்டில் தங்கியிருந்தமையினால் ரோசி சேனாநாயக்க இந்த நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென நகர சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.