4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் மழையை அடுத்து 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர இது தொடர்பாக தெரிவிக்கையில், காலி, ,ரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் கட்டம் 1, கட்டம் 2ன் கீழான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2ம் கட்டத்தின் கீழான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை ,இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எஹலியகொட, குருவிற்ற இரத்தினபுரி மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அதன் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்துள்ளார். திணைக்களத்திற்கு உட்பட்ட 73 நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வறட்சியான பிரதேசங்களில் உண்டு. இந்தப் பிரதேசங்களில் போதுமான மழை வீழ்ச்சி இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன