2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.          சொகுசு ஹோட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்திற்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் காணி வழங்கல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்தால் முழுமையான நேரடி வெளிநாட்டு முதலீடாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி ஹோட்டல் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்து நடாத்திச் செல்கின்ற கருத்திட்டத்திற்காக, தற்போது இலங்கை மின்சார சபையின் பொறுப்பிலுள்ள, மவுசகலே நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றும், நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக கருத்திட்ட முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்புடைய நிறுவனங்களின் உடன்பாடுகளைப் பெற்றுக்கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த கம்பனிக்கு அக்காணித்துண்டை நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.          சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்hக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஜோர்ஜியன் நாட்டு சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் அரச சட்டங்கள் தொடர்பான சட்ட அமைப்புக்களுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.          பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல்வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறுதகு காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டம்

ஈரவலயக் காணிகளுக்கு நிலவுகின்ற அதிக கேள்விஇ காடுகள் அழிவடைதல், காடழிப்பு மற்றும் காணி மண்ணரிப்பு, துரித அபிவிருத்திச் செயன்முறைகள், படையெடுப்புத் தாவரங்களின் பரம்பல், நிலைபேறற்ற வகையிலான நிலப்பயன்பாடு மற்றும் விவசாய முறைகள், மழைவீழ்ச்சி மாற்றமடைதல் மற்றும் வெப்பமயமாதல் மற்றும் வரட்சியின் தாக்கங்கள் போன்ற காரணங்களால் குறித்த வலயத்தில் நிலவுகின்ற உயிர்ப்பல்வகைமை மற்றும் நீரேந்துப் பிரதேசங்கள் அழிவடைந்து போதல், மண்ணின் உற்பத்தி இயலுமைக்கும், தேயிலை, இறப்பர் போன்ற போகப் பயிர்கள் மற்றும் பல்பருவப் பயிர்களின் நிலைபேற்றுத்தன்மைக்கும் பெருமளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், தேயிலை, இறப்பர் காணிகளுக்கு அண்மையில் காணப்படுகின்ற உயரிய உயிர்ப்பல்வகைமையுடன் கூடிய சிறிய காடுகளைப் பாதுகாப்பதற்கும், நிலைபேறான காணி முகாமைத்துவத்திற்கும் சரியான படிமுறைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் இணைந்து அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல்வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறுதகு வகையான காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதியளிப்பு மூலம் 04 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாஇ இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை போன்ற ஆறு (06) மாவட்டங்களில் அரச-தனியார் பங்குடமை மற்றும் சமூகப் பங்குடமை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உத்தேசக் கருத்திட்டத்திற்காக குறித்த நிதி வசதியளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.          நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப் பயிற்சி 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்கல்

இலங்கை 1996.10.24 அன்று நீடித்த அணுப் பரிசோதனைத் தடைகளுக்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதுடன்இ குறித்த உடன்படிக்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக 2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ஏதேனுமொரு நாட்டில் அணுப் பரிசோதனைஃ அணு வெடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிலையப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தால் குறித்த உடன்படிக்கையின் ஐஏ ஆம் உறுப்புரைக்கமைய உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் மற்றும் பணிகளை மேற்கொள்வதற்கும்இ பரிசோதனை உபகரணங்கள் பற்றிய பயிற்சியை வழங்குவதற்காகவும் ஒருங்கிணைந்த களப்பயிற்சி வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் இலங்கையின் தேசிய கேந்திர நிலையமாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் – 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வேண்டுகோளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தகைமை மதிப்பீட்டுக்கமைய மாதுறுஓய தேசிய பூங்காவிற்கு அருகாமையிலுள்ள பிரதேசத்தில் குறித்த ஒருங்கிணைந்த களப்பயிற்சிகளை நடாத்துவது பொருத்தமான இடமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் –  2025 இற்கான வசதியளிப்புக்களை இலங்கை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

05.          வெளிநாட்டவர்களிடமுள்ள இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளல்

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் 1970 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமைய, தற்போது காணப்படுகின்ற ஏதேனும் அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையுண்டு. அதற்கமைய, காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. நெதர்லாந்திடமிருக்கின்ற அவ்வாறான 06 தொல்பொருட்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கருத்திட்டத்திற்கமைய, குறித்த தொல்பொருட்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்காகவும், தற்போது பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற இலங்கைக்குரிய தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காகவும் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.          உலகளாவிய காலநிலை பற்றிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள நாடுகளில்காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை’ உருவாக்கல்

உலகளாவிய காலநிலை பற்றிய உரையாடலில் காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகளுக்குத் தாக்கம் செலுத்துகின்ற தீர்மானம்மிக்க சில துறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றதுடன்,நட்டங்கள் மற்றும் இழப்பீட்டு நிதியமொன்றை தாபித்தல் பற்றி கடந்த காலநிலை பற்றிய உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பல்வேறு காரணங்களால், குறித்த நிதியத்தைத் தாபிப்பதில்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால்இ நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலநிலை ரீதியாக இடருக்குள்ளாகின்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அதன் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் அவற்றைத் தழுவிக் கொள்வதற்கான தலையீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தீர்வு முன்மொழிவுகளின் அவசியமான பகுதியாக, குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ‘கடனுக்கான நீதியையும்’ உள்ளீர்த்துக் கொள்வது பொருத்தமென்பதே இலங்கையின் கருத்தாகும். அதற்கமைய, குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.          Sutech Sugar Industries (தனியார்) நிறுவனம் (கிறீன் /பீல்ட் சீனி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு) நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் காணி வழங்கல்

தாய்லாந்தின் Sutech Sugar Industries கம்பனியால் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வவுனியாவில் கரும்பு பயிரிடலை மேற்கொள்வதற்காகவும், சீனி உற்பத்தி தொடர்பான கருத்திட்ட முன்மொழிவொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் இலங்கையின் சீனித் தேவையின் 20% (120,000 மெட்றிக்தொன் சீனி) உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்திற்கான தொழிற்சாலை வளாகம் மற்றும் வசதிகளுக்காக, வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பற்றைக்காடுகளைக் கொண்ட வவுனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்ரெயார் காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த காணித்துண்டை உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்குவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.          கடனிறுக்க வகையின்மை (Insolvency) பற்றிய சட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் 

வாடிக்கையாளர் கடனிறுக்கவகையின்மை மற்றும் கூட்டிணைக்க முடியாத சிறு வியாபாரங்களின் கடனிறுக்க வகையின்மை பற்றிய ஏற்பாடுகள் 1853 ஆம் ஆண்டின் கடனிறுக்க வகையின்மை கட்டளைச் சட்டத்திலும், கம்பனிகளின் கடனிறுக்க வகையின்மை தொடர்பான ஏற்பாடுகள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்திலும் உட்சேர்;க்கப்பட்டுள்ளன. குறித்த சட்டத்தின் கீழ் காணப்படுகின்ற ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் போதியளவின்மையால், புதிய ஒருங்கிணைந்த கடனிறுக்க வகையின்மை பற்றிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்புடைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி மூன்று மாதகாலப்பகுதியில் (03) அடிப்படை சட்டமூலத்தைத் தயாரித்து வழங்குவதற்கான அதிகாரத்தை நீதி ஆணைக்குழுவுக்கு ஒப்படைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09.          சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறிவீட்டு (திருத்தச்) சட்டமூலம்

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும், அதற்கான திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.01.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறிவீட்டு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.          மத சுதந்திரத்தை இல்லாது செய்தல் மற்றும் மதம்சார் விடயங்களை திரிபுபடுத்தல்

மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மதத்தத்துவப் போதனைகளை இழிவுபடுத்தலைத் தடுப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. அதற்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அதுபற்றிய விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவம் போன்ற பிரதான மதங்களின் வணக்கத்தலைவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், உடகங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.          2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்

 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் தயாரிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்த (தடைசெய்யப்பட்ட நிரல்) ஒழுங்குவிதிகள்இ 2329/43 இலக்க 2023.04.27 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.          இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் இலங்கைக்கான தலைமைத்துவம் 2023-2025

இந்து சமுத்திரத்தின் 23 எல்லை நாடுகளின் அங்கத்துவத்துடன் கூடிய இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் தலைமைத்துவம் 2023 ஒக்ரோபர் மாதத்தில் குறித்த அமைப்பின் சமகால தலைமைத்துவத்தை வகிக்கின்ற பங்களாதேசத்திடமிருந்து இலங்கைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வமைப்பின் தலைமைத்துவம் வகிக்கின்ற காலப்பகுதியில் பிராந்திய மற்றும் உறுப்பு நாடுகளின் அபிவிருத்திக்காக பிராந்திய ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரிதிநிதிகளுடக் கூடிய தேசிய செயலணியொன்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும்இ இரண்டு வருட காலப்பகுதிக்கு செயலகமொன்றை நிறுவுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13.          1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

நாட்டில் நிலவுகின்ற ஆரோக்கியமற்ற பொருளாதார நிலைமைகளால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மற்றும் நிதிச்சந்தையின் அடிப்படையில் அதிகரிக்கின்ற அழுத்தத்தைக் குறைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட ஒருசில பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிகத் தடைகளை விதிப்பதற்கான ஒழுங்குவிதிகள் 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை தளர்த்துவதன் மூலம் சென்மதி நிலுவையின் மீது குறைந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தெரிவு செய்யப்பட்ட பொருள் வகைகளை இறக்குமதி செய்வதற்கான மட்டுப்பாடுகளை நீக்க வேண்டிய தேவை இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினர்களால் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்காலிக இறக்குமதிகளுக்கு தடைவிதிக்கின்ற அட்டவணையில் இயைபு முறைக் குறியீடுகளின் (US Code) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 1,216 அவதான பட்டியலிலிருந்து வகைப்படுத்தப்பட்டுள்ள இயைபு முறைக் குறியீடு 286 இனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2023.06.09 ஆம் திகதிய 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளுக்கான பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14.          அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கி ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல்

2023 தொடக்கம் 2024 வரைக்கான 02 வருட காலத்திற்கு அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த கலந்துரையாடல் 2023.05.17 ஆம் திகதி நடாத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட பெறுகை உரித்து (ளுனுசு) 371.2 மில்லியன்களை 02 தவணைகளில் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச நிதி வசதிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உடன்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனத்துடன் (IDA) ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15.          சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுதல்

சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் வரியை அறிவிடுதல், சூதாட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் ஆட்களுக்கும் சமூகத்திற்கும் இடம்பெறுகின்ற தீயவிளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளுக்காக அனைத்து சூதாட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற ஏற்புடைய வகையில் சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எனும் பெயரிலான ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமையஇ சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல், அதிகாரசபையை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16.          பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கை மேற்கொள்ளல்

தென்கிழக்காசிய மன்றத்தின் (ASEAN) 10 உறுப்பு நாடுகள் மற்றும் சங்கத்தின் நாடுகளுடன் இதுவரைக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு பிராந்திய நாடுகளான அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற 05 நாடுகள் இணைந்து நடைமுறைப்படுத்துகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை, பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையில் இணைந்து கொள்வதால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஏனைய நன்மைகள் பலவற்றையும் பெற்றுக்கொள்வதற்கு இயலுமையுண்டு. அதற்கமைய, பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கையில் இணைந்து கொள்வதற்காக முறையான விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17.          1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்

நிலைபெறுதகு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற ஆற்றல்கள் மற்றும் மீட்சித்திறன்களுடன் கூடிய வங்கித்துறையை பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன