2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.          இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுங்க நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய ஒத்துழைப்புக்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல் மற்றும் இருதரப்பினர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.          மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் ஒத்தழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

சுகாதார சேவைகளை மேம்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் இருநாடுகளில் பொதுமக்களின் ஒட்டுமொத்த நல்லாரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தல் மற்றும் முறைமைப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையின் ஒத்தழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுகாதார சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.          கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கைகளுக்கான இலங்கைப் பேரவை மற்றும் மலேசியாவின் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடன் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விவசாய துறையில் விஞ்ஞான ரீதியான ஒத்துழைப்புக்களை முறைசார்ந்த வகையில் மேற்கொண்டு செல்வதற்காக கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கைகளுக்கான இலங்கைப் பேரவை மற்றும் மலேசியா விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையில் 05 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் தற்போது முடிவடைந்துள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தை மேலும் (05) ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.          உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு பொறிமுறையை தாபித்தல்

தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழு (Truth and Reconciliation Commission)  தொடர்பான ஆரம்பக் கற்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தனர். குறித்த விஜயத்தின் போது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டு அரச பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. அதற்கமைய,  தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, எமது நாட்டில் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு பொறிமுறையை தாபிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.          கல்வித்தகைமை மட்ட நியமங்கள் சட்டகம் மற்றும் உயர்கல்வித் தகைமை மற்றும் நற்சான்றிதழ்களை அங்கீகரித்தல் பற்றிய சர்வதேச மாநாட்டை நடாத்துதல்

உயர்கல்விக்கான வாய்ப்புக்களின் சர்வதேசமயப்படுத்தல் அதிகரித்துள்ளமையால், ஒவ்வொரு நாடுகளிலுள்ள கல்வித் தகைமை மட்ட நியமங்கள் சட்டகத்திற்கமைய வழங்கப்படுகின்ற கல்வித் தகைமைகள் மற்றும் நற்சான்றிதழ்களை பரஸ்பரமாக அங்கீகரிப்பதற்கான வசதிகளை வழங்குகின்ற ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை வயம்ப பல்கலைக்கழகம், கல்வி அமைச்சுடன் இணைந்து ஐரோப்பா சங்கத்தின் “Erasmus+”   வேலைத்திட்டத்தின் கீழ் நிதியனுசரணை வழங்குகின்ற ‘ஆசிய நாடுகளுக்கிடையேயான துறைசார் அங்கீகாரம் பற்றிய பிராந்திய ஒத்துழைப்பு (RecoAsia)   மூலம் ஒருசில செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிதியனுசரணையுடன் 2023 யூன் 28 மற்றும் 29 ஆம் திகதி இரண்டு தினங்களில் கல்வித்தகைமை மட்ட நியமங்கள் சட்டகம் மற்றும் உயர்கல்வித் தகைமை மற்றும் நற்சான்றிதழ்களை அங்கீகரித்தல் பற்றிய சர்வதேச மாநாட்டை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மாநாட்டை நடாத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.          தொலைவிட உணர்தல்முறை ஆய்வு பற்றிய 45 ஆவது ஆசிய மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்

தேசிய அபிவிருத்திப் பணிகளின் போது தொலைவிட உணர்தல்முறை ஆய்வு தொழிநுட்பத்தின் (Remote Sensing Technology)  முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆசிய – பசுபிக் பிராந்திய நாடுகள் இணைந்து தொலைவிட உணர்தல்முறை ஆய்வு பற்றிய ஆசிய அமைப்பை தாபித்துள்ளனர். இலங்கையும் அவ்வமைப்பின் ஆரம்ப உறுப்பினராக அங்கத்துவம் வகிக்கின்றது. இவ்வமைப்பு பொது உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்ட உறுப்பாண்மை கொண்ட அங்கத்துவத்தைக் கொண்ட அமைப்பாகும். தொலைவிட உணர்தல்முறை ஆய்வு பற்றிய 45 ஆவது ஆசிய மாநாடு 2024 ஒக்ரோபர் – நவம்பர் காலப்பகுதியில் 05 நாட்கள் கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

•             தமிழ் மொழிபெயர்ப்பில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியிலுள்ள ஆவணமே அடிப்படையாகக் கொள்ளப்படும்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன