2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர முடிவுகள்: 63 சதவீதம் பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி

2022 ஆம் ஆண்டுக்கான க பொ சான்றிதழ் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04)  பிற்பகல் வெளியிடப்பட்டன.

பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 32,797 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலையின் பெறுபேறு ஆவணத்தை பதிவிறக்கம் செய்து அச்சு பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பெறுபேறுகளை மீள்பரிசோதனைக்கு  செப்டம்பர் 7 முதல் 16ம் திகதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன