2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் ஜந்தாவது போட்டி ,கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (04) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் போட்டியிடுகின்றன.
போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்று முன்தினம் (02) இதே மைதானத்தில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. இஷான் இந்திய முன்னாள் வீரர் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி இரத்து செய்யப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தியா-நேபாளம் இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனிடையே பல்லேகல இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.