13 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

ஆசிரியர் சேவையில் மேலும் 13 ஆயிரம் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பல்வேறு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு ஐயாயிரத்து 500 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர, உயர்தர வகுப்புக்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இதற்கு மேலதிகமாக கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியான ஏழாயிரத்து 500 ஆசிரியர்கள் நாளை முதல் தேசிய ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்..

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன