ஹோமாகம தீ சம்பவம்: ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணை

ஹோமாகம தொழிற்பேட்டையில் இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரவு 8.30 மணியளவில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.. தீயணைப்பு வீரர்கள் தவிரஇ இராணுவம்இ விமானப்படைஇ கடற்படை மற்றும் பொலிசார் அடங்களாக சுமார் 300 பேர தீயை கட்டுப்படுத்வதில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டே, தெஹிவளை மற்றும் ஹொரணை நகரசபைகளால் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தீயை கட்டுப்படுத்துவதற்காக இராணுவம் மற்றும் விமானப்படையின் தண்ணீர் பவுசர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயை கட்டுப்படுத்த 6 தண்ணீர் பவுசர்கள் பயன்படுத்தப்பட்டதுடன்இ 3 கூடுதல் பவுசர்கள் அந்தந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிப்பட்டது..

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் ஹகுரன்கெத்த நாரங்கமடில்லா பகுதியில் தீ பரவியதாகவும், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி வெல்கம்வெஹர வனப்பகுதியில் நேற்று (17) பிற்பகல் ஏற்பட்ட தீயினால் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன