ஹோட்டல் விருந்தோம்பல் தொழில் துறையில் இலங்கைப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு

ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் தொழில் துறையில் இலங்கைப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பான  கலந்துரையாடல், துபாயில் உள்ள உலகின் சமையல் துறையில் பிரபலமிக்க  சமையல் கலைஞர் அலெக்ஸாண்ட்ரோஸ் பாவ்லோபௌலோ Alexandros Pavlopoulos என்பவருடன் நடத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறையில் சர்வதேச தரத்திற்கு  ஏற்ற தொழிலாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச அந்தஸ்திலான ஊழியர்களை  உருவாக்குவதற்கான  பயிற்சி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார இணக்கம் தெரிவித்தார்.

இதுபோன்ற பயிற்சி நிறுவனங்கள் தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலும் இயங்கி வருவதாக சமையல் கலைஞர் அலெக்ஸாண்ட்ரோஸ்

பாவ்லோபௌலோஸ் Alexandros Pavlopoulos  தெரிவித்தார். எதிர்காலத்தில் சமையல் தொடர்பான டிஜிட்டல் தளம் ஒன்று ஆரம்பிக்கப்படும்  என்றும், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் அனைவருக்கும் அதை அணுகும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.