ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் பிரதேங்களுக்கு இலவசமாக கலப்பின சோள விதைகள்

பெரும்போகத்தில் சோள உற்பத்திக்குத் தேவையான சோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதிக்கான சோள விதையினங்கள் இதன்போது வழங்கப்படவிருக்கின்றன. சிறிய அளவிலான விவசாய தொழில்முயற்சி பங்கேற்பு செயற்றிட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கான கலப்பின விதையினங்கள் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன. சோளப் பயிர்ச் செய்கைக்குத் தேவையான எட்டாயிரம் மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோளச் செய்கையாளர்களுக்கு இந்த உரத்தையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன