ஹங்குரன்கெத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டு

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக ஹங்குரன்கெத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை  மேற்கொண்டுள்ளனர்.

சுமார் இருநூறு பேர் கலந்து கொண்ட போராட்டத்தை கலைக்க பொலிசார்  38 எச்சரிக்கை வேட்டுக்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் எச்சரிக்கை அறிவிப்பையும் பொருட்படுத்தாமல்  ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும்  சம்பவம் குறித்து   சந்தேகநபவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன