ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமைத்துவத்திடமிருந்து  தகவல்

அரசியல் செயல் நிறைவேற்றத்துறையினரிடமிருந்து கிடைக்கும் அழைப்புக்களின் போது  கட்சியின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி கலந்துரையாடல்களில் பங்கேற்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமைத்துவத்திடமிருந்து  உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

இதற்கமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு உத்தியோகபூர்வமாக  விடுக்கப்படும் அழைப்புகளுக்கு மாத்திரம் தமது பிரதிநிதிகளை கலந்துகொள்வதற்கு  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவமைத்துவம்  தீர்மானித்துள்ளது.

மார்க் சில்வா

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன