ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நிறுவனங்கள் மற்றும் தாமரை கோபுரத்தை உள்ளடக்கிய லோட்டஸ் டவர் நிறுவனம் அடங்களாக 12 அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
திரிபோஷ நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் முதலானவையும் நிதி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு:
http://documents.gov.lk/files/egz/2023/5/2334-07_T.pdf