ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்க்ஷ

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ள போதிலும் ,பசில் ராஜபக்க்ஷவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெரும் பாலும களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் பொது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.

எதிர்பார்த்தது போன்றே அவர் அதனை நிறைவேற்றிவருகிறார். ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை முன்னிறுத்தும் தீர்மானத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இல்லை. கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச முன்வந்தால் அவருக்கு அனைவரது ஆதரவும் கிடைக்கும்’ என்றார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன