ஸ்பெயின் மகளிர் அணி முதல்முறையாக சாம்பியன்

மகளிர் உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மகளிர் உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று (20) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஸ்பெய்ன் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

ஒன்பதாவது மகளிர் உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உதைப்பந்தாட்ட போட்டியில்
லீக் மற்றும் நொக்-அவுட் சுற்று முடிவில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. . இவ்விரு அணிகளில் யாருக்கும் கிரீடம் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்(20) றிரவு 75 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
வெற்றி பெபற்ற ஸ்பெயின் அணிக்கு மொத்தம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன