வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியுமா ?

வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியுமா என்பதை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபையின் தலைவர் திரு.டபிள்யூ.ஈ.ஈ.பி.வீரசேகரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வறட்சியின் தாக்கத்தினால் பல மாவட்டங்களில் நெற்செய்கை சேதமடைந்துள்ளது.உடவலவ நீர்த்தேக்கம் மற்றும் சந்திரிக்கா குளத்தின் நீரை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அநுராதபுரம் திசலேகம அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வறட்சி காரணமாக 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) மாலை வெளியிட்டப்பட்ட இந்த அறிக்கையில், வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, சேருவில, குச்சவெளி, வெருகல், மூதூர், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவுகளில் 2746 குடும்பங்களை சேர்ந்த 8976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மேல் மாகாணத்தில் குருணாகல், பமுனகொட்டுவ, கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த மக்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன