வட மாகாண முன்பள்ளி சிறார்களின் போஷாக்கு குறைபாடு: நிதி உதவியை கோருகிறார் மாகாண பிரதம செயலாளர்

வடக்கு மாகாண முன்பள்ளி சிறார்களின் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், அல்லது கிராம மட்ட பொது அமைப்புகள் அதற்கான மேலதிக நிதி உதவியை வழங்க முன்வரவேண்டும் என்று மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ,வடக்கு மாகாணத்தில் ஐந்து  வயதிற்கு உட்பட்ட 8 ஆயிரம் முன்பள்ளி சிறார்கள் போஷாக்கு குறைபாட்டினால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கினை அதிகரிப்பதற்கு 6 மாத காலத்திற்கான சத்துமா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அதற்கான நிதி மூன்று மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றது. மிகுதியாக காணப்படும் மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர்கள், அல்லது கிராம மட்ட பொது அமைப்புகள் அதற்கான நிதியினை வழங்க முன்வரவேண்டும் என்றும் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன