வடக்கு மாகாணத்திலும் ,திருக்கோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் மேற்கு ,சபரகமுவ மத்திய, வடமேல் , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மற்றும் திருக்கோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை இன்று (08) பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் , நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன