உக்ரைனை தாக்குவதற்கு ரஷ்யா கூலிப்படையை பயன்படுத்தும் குற்றச்சாட்டை ரஷ்யா மட்டுமன்றி இலங்கையில் உள்ள சிலர் மறுத்ததை நாம் அறிவோம். உலகின் நான்கு மூலைகளிலும் பரந்துபட்ட வகையில் இருக்கும் உக்ரேனியர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளரை எதிர்கொள்ள தலைநகர் Kyiv வை நோக்கி படையெடுத்தபோது, ரஷ்யாவின் படைவீரர்கள் படைஅணியியை விட்டு வெளியேறியதால் ஆதரவற்ற நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள ஒரே ஒரு தீர்வு மட்டுமே அப்போது இருந்தது. அது கூலிப் படையை படிப்படியாக யுத்த களத்திற்கு அனுப்புவது என்ற எண்ணமாகும். புடினின் இரத்தவெறிப் போரில் Yevgeny Prigozhin தலைமையிலான வாக்னர் துணை ராணுவ வீரர்கள் வாடகைக்கு கொலையாளிகளாக பயன்படுத்தப்பட்டனர்.கூலிப்படை வீரர்களின் செயல்பாடுகள் குறித்து சமீபகாலமாக உலக நாடுகளில் எதிர் ஒலி உரையாடலுக்கு சிறந்த உதாரணம் ரஷ்யா செய்த இந்த சட்டவிரோத செயல் ஆகும். ஒரு நாட்டின் இராணுவமும் கூலிப்படையும் இரண்டும் வெவ்வேறானவை. இருப்பினும் ப்ரிகோஜினின் வாக்னர் துணை ராணுவப் படைகளின் வெளிப்பாடு புடினுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. கூலிப்படையைப் பயன்படுத்தி எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் மீது படையெடுத்தால், அந்த ஆக்கிரமிப்பு வழிமுறைகளில் குறைந்தபட்ச வரம்புகளைக் கூட மீறுவது இயல்பு. இத்தகைய செயல்களில் ஈடுபடும் நாட்டை உலக நாடுகள் வெறுக்கின்றன. மக்கள் தொகையில் ஒரு பகுதியினரை அடக்குவதற்காக கூலிப்படையினரைப் பயன்படுத்திய நாடுகளில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
வடக்கு யேமனில் உள்நாட்டுப் போரில் ஹென்றி ஜோன்சன் கூலிப்படை நடவடிக்கையைத் முன்னெடுப்பதற்கு முன்பு SAS படைப்பிரிவுக்கு கட்டளையிட்டார். 1960களில். பின்னர் அவர் இரண்டு தனியார் இராணுவ நிறுவனங்களை அமைத்தார். Keenie Meenie Services (KMS) kw;Wk; Saladin Security. என்ற பெயர்களில் இந்த இரண்டு நிறுவனங்களை அமைத்தார். இந்த இரண்டு நிறுவனங்களில் கேஎம்எஸ் நிறுவனம் இலங்கையில் கூலிப்படை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரபு அல்லது ஸ்வாஹிலி மொழியில் Keenie Meenie Services (KMS) மற்றும் ,Saladin Security. என்ற பெயர் இரகசிய நடவடிக்கை என்று பொருள்படும். ஹென்றி ஜோன்சனின் கீனி மீனி நிறுவனம் வளைகுடா பகுதியின் மன்னர்களை ஆதரித்தது. ஓமானின் சிறப்புப் படை சுல்தானுக்குக் கட்டளையிடுவது மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் சேக் யமானிக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவை அவரது நிறுவனத்தின் முக்கிய கடமைகளுக்கு உட்பட்டிருந்தது.
வளைகுடா பிராந்தியத்தில் தனது வணிக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாத அவரது நிறுவனமான KMS, 1980 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு துணை இராணுவ பொலிஸ் பிரிவு உருவாகுவதற்கும் பயிற்சிக்கும் பங்களிப்பு செய்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நூற்றுக்கணக்கான தமிழர்களை சித்திரவதை செய்ததாக இந்த பிரிவு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜோன்சனின் இராணுவம், தமிழ்ப் பொதுமக்களை கொலை செய்வதற்காக இராணுவத்தின் ஹெலிகாப்டர்களுக்கான துப்பாக்கிகள் இலங்கைக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது ஐ.நா கண்காணிப்பாளரின் விமர்சனத்திற்கு உள்ளான்மை குறிப்பிடத்தக்கது.
கூலி படைத்தொழில் எவ்வளவு லாபகரமானது என்பதை ஜோன்சனின் ஆக்கதில் உள்ளடங்கியுள்ள தகவல்கள் உலகுக்கிற்கு எடுத்துகாட்டுகிறது. ஆவணங்களில் ஹென்றி ஜோன்சன் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் மூலம் அவர் எங்கிருந்து பணத்தை சம்பாதித்தார் என்பதற்கான விரிவான பதிவுகள் இல்லையென்றாலும், அவர் தனது வாழ்நாளில் சம்பாதித்த சொத்து குறித்த விடயத்தை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Declassified இணைய தளத்திற்கு தெரிவித்த விடயங்களில் கூலிப்படை தமிழ் சிவில் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை மேற்கொண்டது என்பதை பெருந்தொகையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தலைமை தாங்கும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘1980 களில் தமிழர்களை ஒடுக்குவதற்கு KMS நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விடயத்தை இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்து அதன் நன்பகத்தன்யை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
கூலிப்படைத் தொழில் எவ்வளவு லாபகரமானது என்பதை ஜோன்சனின் கூற்றுக்கள் உலகுக்கு கூறுகிறது. ஹென்றி ஜோன்சன் தொடர்பாக வெளிவரும் ஆவணங்களில் அவர் தனது பணத்தை எங்கிருந்து எவ்வாறு சம்பாதித்தார் என்பதற்கான விரிவான பதிவுகள் இல்லை என்றாலும், அவர் தனது வாழ்நாளில் சம்பாதித்த முழு சொத்தின் காரணமாக மற்ற நாடுகளின் சார்பாக போரை முன்னெடுப்பதற்கு லாபகரமாக அமைந்ததாக உலகு நாடுகள் கூறுகின்றன.
ஜோன்சன் கொண்டுள்ள மொத்த சொத்தின் மதிப்பு 4,719,115 பவுண்கள் மற்றும் நிகர மதிப்பு 3,979,444 பவுண்கள் ஆகும். பணவீக்கத்திற்கு ஏற்ப, இத்தொகையின் மதிப்பீடு இன்றையநிலையில் 6 மில்லியன் பவுண்கள் ஆகும், இது இலங்கை நாணயத்தில் சுமார் ரூபா 2.3 பில்லியன்களாகும்.
கூலிப்படை நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை புற்றுநோயை கட்டுப்படுத்தும் சர்வதேச தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக இவர் கொடுத்துள்ளார். இத்தொகை 2,000 பவுண்களாகும். விசேட விமான சேவை படை சங்கத்திற்கும் 10,000 பவுண்களை வழங்கியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில், லண்டனின் மிக உன்னதமான மாவட்டங்களில் ஒன்றான Kensington னில் உள்ள Ridley Mews ல் ஒரு மில்லியன் பவுண்களுக்கு வீட்டை வாங்கினார். தற்போது இதன் மதிப்பு 3.2 மில்லியன் பவுண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காணி பதிவு பிரிவின் தகவல்களுக்கு அமைவாக அந்த வீடு இன்னும் ஜோன்சன் குடும்பத்தினரின் பெயரிலேயே இருக்கின்றது.
1980 ஆண்டின் பிற்பகுதியில், KMS -ஆதரவுடனான கொன்ட்ரா கிளர்ச்சியாளர்களால் நிகரகுவாவில் மருத்துவ மனை மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க காங்கிரஸ் விசாரணை நடத்தியது. இதனைத்தொடர்து KMS மூடப்பட்டது. ஆனால் ஹென்றி ஜோன்சன் இணைந்து நிறுவிய மற்ற நிறுவனமான Saladin Security இன்னும் செயல்பட்டு வருகிறது.
தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்வதேச உறவுகளை பாதிக்கலாம் என்று தெரிவித்து பிரிட்டனின் வெளிநாட்டலுவல்கள் அலுவலகம் தேசிய காப்பகங்களில் KMS இன் கோப்புகளை தொடர்ந்து தணிக்கைக்கு உட்படுத்தி வருகிறது, இதனால் இந்த நிறுவனத்தின் தகவல்கள் தொடர்பில் நழைவுரிமை கோரி, Declassified இணையதளம் தகவல் ஆணைக்குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த கோரிக்கை இந்த ஆண்டு இறுதியில் விசாரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான காணொலியை கீழே உள்ள இணைப்பில் பார்வையிட முடியும்.
ஆக்கம் விசேட எழுத்தாளர்