லும்பினியிலிருந்து கொழும்புக்கு கண்கவர் சைக்கிள் சவாரி…

இலங்கை, இந்தியா மற்றும் நேபாளத்தின் முப்படையினர் மற்றும் இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினியில் இருந்து இந்தியாவில் உள்ள புனிதத் தளங்கள் ஊடாக கொழும்பு வரை நடைபெறவுள்ள கண்கவர் சைக்கிள் சவாரி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் (10) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

குசினாரா, புத்தகயா, ஷாவஸ்திரி, சாராநாத் சங்கஸ்ஸ ஆகிய பகுதிகள் வழியாக வரும் இந்த சைக்கிள் சவாரி மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா எல்லோராவை கடந்து தென்னிந்தியாவை அடைந்து ராமேஸ்வரம் வழியாக கொழும்பை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான சமைய மற்றும் கலாச்சார உறவுகளைப் பாராட்டிய பிரதமர், இந்த சைக்கிள் சவாரிக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

கலாசார அமைச்சின் பணிப்புரையின் கீழ் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இந்த சைக்கிள் சவாரியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இது தொடர்பான அமைச்சர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சைக்கிள் சவாரியின் முக்கிய ஏற்பாட்டாளர்களான இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகுல் படேல் மற்றும் பிரசாந்த் கருல்கர் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன