ராகுல் காந்திக்கு காங்கிரஸ் ,கூட்டணி கட்சியினர் வரவேற்பு

எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று (07) வருகைதந்தார் .

ராகுல் காந்தியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன