ரஜினிகாந்த் இமயமலை பயணம்

‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று (08) இமயமலை பயணமானார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை செல்லவில்லை.

2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை வெளியிடப்படவுள்ளது..

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் அங்கிருந்து இமயமலை செல்கிறார்.
ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த்இ படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்’ என்றார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன