யுத்தத்திற்கு பின்னர் வட மாகாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ……

30 வருட யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட 60 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

வடமாகாணத்திற்கு பல்வேறு நிதிமூலங்கள் மூலமாக பல மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தற்போது இயங்காத நிலையில் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பேராசிரியர் சி.சிவானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணப்படும் குடிசை கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில்களை பாரியளவிலான கைத்தொழிலாக விரிவுபடுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர்   இங்கு உற்பத்தியாகும் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திகளாக வெளிமாவட்டங்களிலும் சந்தைப்படுத்தலாம்.

மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா துறைகளை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும். இவ்வாறான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது உற்பத்தியாளரின் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் என, யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பேராசிரியர் சி.சிவானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இடர்கள் வரும்போது மட்டும் கொள்கை தொடர்பாக கதைக்கின்றோம். இனி அவ்வாறான நிலையினை மாற்றி அமைக்க, வடமாகாணத்திற்கு பொதுவான கொள்கை திட்டமிடலை தயாரிக்க எதிர்ப்பார்த்துள்ளோம். அதன் மூலம் 10 வருடங்களில் அனேக தொழில் முனைவோரை உருவாக்கமுடியும் என்றும் கூறினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன