யாழ் பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய நடைமுறைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இதுகுறித்து தெரிவிக்கையில்,  யாழ்ப்பாணத்தில் இளம் வயதினர் மீதான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

இதுகுறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபர்  மேலும் தெரிவிக்கையில்,  பெண்கள் பாடசாலைகளில் வகுப்புகள் ரீதியாக மாணவிகளின் பெற்றோரின் கைடக தொலை பேசி இலக்கங்கள் கொண்ட ‘வட்ஸ் அப்’ குழு உருவாக்கப்படும். இதனை வகுப்பு ஆசிரியர் நிர்வகிப்பார். அந்தக் குழுவின் மாணவிகளின் வரவு உள்ளிட்ட அவதானிப்புகளை ஆசிரியர் பதிவிடுவார். இதன் மூலம் மாணவிகளின் பெற்றோருக்கு தமது பிள்ளைகள் குறித்த விடயங்கள் தெரியவரும் என்றார்.

மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விபரங்கள், சாரதிகளின் கைடக்க தொலைபேசி இலக்கங்களும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வருவதுடன், இந்த குழுக்கள் உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படும் என்றும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் மேலும் தெரிவித்தார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன