யாழ்.  குடிநீர் விநியோகம் – விசேட குழு நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  (31) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டபோதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த  குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர் –  களப்பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கையை  இந்த சமர்ப்பிக்க உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன