யாழ்ப்பாண மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தின் மருதனார்மடம் பொதுச்சந்தை மற்றும் திருநெல்வேலி பொதுச்சந்தை ஆகியவற்றில் மரக்கறி வகைகளின் விலை இன்று வீழ்ச்சியடைந்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அதிகளவான மரக்கறி வகைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ பச்சைமிளகாய் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போத 100 ரூபா தொடக்கம் 70 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் 60 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன