யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில், நாளையதினம் விசாரணை நடைபெறவுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
,பாடசாலை மாணவர்களுக்கான ,ஆங்கில மொழி விஞ்ஞான பாட பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வினாத்தாள் ஏற்கனவே வெளியான வினாத்தாள் என தெரியவந்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியமை தொடர்பில் உடனடியாக விசாரணையை நடத்துமாறு, வடக்கு மாகாண ஆளுநர் தம்மை பணித்துள்ளதாகவும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.