யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி குடிசன மதீப்பீட்டுப் பணிகள்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி குடிசன மதீப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது,

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், பிரதித் தொகை மதிப்பு ஆணையாளர் தலைமையில் நிரற்படுத்தல் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ம.வித்தியானந்நேசன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் முழு ஒத்துழைப்புடன், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன