மொபைல் கேம்கள்: ஒரு குடும்பம்,வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தை இழந்து அழுது புலம்பல்

கையடக்க தெலைபேசி போட்டி – மொபைல் கேம்கள் பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று பலமுறை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தும், இதனை பெற்றோர்கள் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இதன் விளைவாக ஒரு குடும்பமே, வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தை இழந்து அழுது புலம்பி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி கேமிங் அடிமைத்தனத்தால் நடந்த சோக சம்பவம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 13 வயது சிறுமி மொபைல் கேம்களில் பெரும் தொகையை இழந்துள்ளார். அவரது செயல்களால் குடும்பத்தின் மொத்த சேமிப்பும் நான்கே மாதங்களுக்குள் முற்றிலும் காலி ஆகியுள்ளது. இந்த சம்பவம் அதிகப்படியான கேமிங்கின் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. குழந்தைகளின் டிஜிட்டல் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பெற்றோரின் வழிகாட்டுதலின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

இந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை தான் முதலில் இதனை கண்டுபிடித்துள்ளார். சிறுமி பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளாரா என சந்தேகித்து, அவரது பெற்றோரிடம் சிறுமியின் தொலைபேசி  உபயோகம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். பொதுவாக இணையவழி  கேம்கள் விளையாடுபவர்களுக்கு அதிக பலன்கள் தருவதாக அவர்களைத் தூண்டிவிட்டு, பெரும் தொகையை சுருட்டிவிடுகிறது.

இப்போது வீட்டில் இருக்கும் பெரியவர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகியுள்ளனர்.  இதனால், சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கின்றனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன