மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்வு அமைப்பு மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, புலத்கொஹூப்;பிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியந்தோட்டை, வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, கொலன்ன, எலபாத்த, கஹவத்த, எஹெலியகொட, நிவித்திகல, அயகம, குருவிட்ட, கலவான, கொடக்கவெல, இரத்தினபுரி, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன