மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய காட்டு யானை

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக  உயிருக்கு போராடிய காட்டு யானை இன்று (26) உயிரிழந்துள்ளது.

நீர் அருந்துவதற்காக கால்வாய்க்குள் வீழ்ந்த காட்டு யானையை வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு காயமுற்று நடக்க முடியாமல் இருந்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (23) அதிகாலை வேளையில் காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்ததாகவும், காலில் காயமேற்பட்டு நடக்க முடியாத நிலையில் யானை சிலநாட்கள் நடமாடி வந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன