மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி: ரோஹித் சர்மா செய்த முக்கிய தவறு

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா செய்த ஒரு முக்கிய தவறு ஆவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியா – ஆவுஸ்திரேலிய இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் கடந்த 22 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை இந்தியாவில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது.
முதல் இரண்டு போட்டிகளுக்கு அணித்தலைவராக கே எல் ராகுல் செயல்பட்டார். அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறவில்லை. அப்போதும் இந்திய அணி வென்று இருந்தது. அதனால், அவர்கள் மூவரும் ஆடும் மூன்றாவது போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதினர். ரோஹித் சர்மா மூன்றாவது போட்டிக்கு அணித்தலைவராக செயல்பட்டார். ஆவுஸ்திரேலிய நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் அதிரடி ஆட்டம் ஆடினர். வார்னர் 56 ஓட்டங்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித், மார்ஷ் இணைந்து கூட்டணியாக ஓட்டங்களை குவிக்கத் துவங்கினர். 23 ஓவர்களில் ஆவுஸ்திரேலிய 176 ஓட்டங்களை எட்டியது. கிட்டத்தட்ட ஓவருக்கு 8 ஓட்டங்கள் அடித்துக் கொண்டு இருந்தது அந்த ஜோடி. இந்திய அணியில் அதுவரை பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா பந்து வீசி இருந்தனர். அவர்களில் சுழற் பந்துவீச்சாளர் சுந்தர் மட்டுமே ஓவருக்கு 4 ரன்கள் கொடுத்து கட்டுக் கோப்பாக வீசி இருந்தார். அவருக்கு அடுத்து ஓவருக்கு 6 ரன்கள் என்ற அளவில் கொடுத்து இருந்தார் ஜடேஜா. அதன்படி பார்த்தால் சுழற் பந்துவீச்சுதான் அங்கே முக்கிய இடம்பிடித்தது.
அப்படியானால் ரோஹித் சர்மா குல்தீப் யாதவ்வை முன் கூட்டியே பந்து வீச அழைத்து இருக்க வேண்டும். ஆனால், 23 ஓவர்கள் வரை அவருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தார் ரோஹித். அது ஏன் என்பதே யாருக்கும் புரியவில்லை. குல்தீப் யாதவ் தன் மூன்றாவது ஓவரிலேயே லாபுஷேன் மிட்ஷெல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்புமுனை அளித்தார். ஆனால், அதற்குள் போட்டி ஆவுஸ்திரேலிய வசம் சாய்ந்து விட்டது. முதல் 23 ஓவர்கள் வரை ஓவருக்கு 7.5 – 8 ஓட்டங்கள் அடித்துக் கொண்டிருந்த அவூஸ்திரேலியா குல்தீப் யாதவ் எடுத்த விக்கெட்டுக்கு பின் தொடர்ந்து விக்கெட்டை இழந்து ஓட்டங்களை குவிக்கும் வேகத்தை இழந்தது. 400 ஓட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆவுஸ்திரேலிய 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்கள் எடுத்தது. முக்கிய சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்வுக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் அவூஸ்திரேலியா முன்பே விக்கெட்டை இழந்து இருக்கும் அல்லது ஓட்டங்களை குவிக்கும் வேகத்தை குறைத்து இருக்கும். அந்த வாய்ப்பை குல்தீப் யாதவ்வுக்கு கொடுக்காமல் தவறு செய்து அணித்தலைவர் ரோஹித் சர்மா. இதை அவர் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இதை அடுத்து இந்தியா சேஸிங்கில் சொதப்பி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவூஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது என்று ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன