முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்சார்பில் அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுத்தொகை என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சார்பில் அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுத்தொகை  தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக  ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற  அவர், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில்  அரசாங்க மேற்கொண்டசெலவுகள் பற்றிய விபரங்களை கோரி அதற்கான  விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அலுவலகத்துக்குள் நுழைந்த போது அங்கு பலத்த பாதுகாப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன