முச்சக்கர வாகன கட்டணம் குறைக்கப்பட மாட்டாது

பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வாகன கட்டணம் குறைக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நிலையான செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அனைத்தும் தற்போது செலவுகளும் அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

கட்டண மீளாய்வுக் குழுவின் ஊடாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தில் அரசாங்கம் குறிப்பாக தலையிட வேண்டும் எனவும், கட்டணத்தை குறைக்கக் கூடிய வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன