மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அழுகிய மீன்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரால் புதன்கிழமை(06.09.2023) பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்ட
இந்த மீன்களை விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 வியாபாரிளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதிக்கு திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு பொதுச் சுதாதார பரிசோதகர் இந்த மீன்களைக் கைப்பற்றி அவற்றை எரியூட்டி அழித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுசார விற்பசைன் சட்டத்திற்கு முரணான வகையில், வெளிக்காட்டி விற்பனை செய்த 11 கிலோ கிராம் புகையிலையையும் இதன்போது களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன