மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றம் ,அலங்கார வளை திறப்பு

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றமும் அலங்கார வளைவு திறப்பு விழாவும் இன்று (16) மதியம் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம குரு சி.ஸ்ரீ சண்முகநாத குருக்கள் தலைமையில் இதுதொடர்பான வழிபாட்டு நிகழ்வில் ஏராளமான அம்பிகையின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வழமையாக 10 நாட்கள் நடைபெறும் மஹோட்சவ திருவிழா இம்முறை 15 நாள் திருவிழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹோட்சவ திருவிழா எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன