மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த சுற்றுலா ரயில் விபத்துக்குற்றானதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த  ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென இன்று (26)  அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட் டுள்ளது. இதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கூடாது என்ற தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததுடன், ரயிலில் கொள்ளையர்கள் ஏறி விடுவார்கள் என்ற அச்சத்தில் பயணிகள் பெட்டியை பூட்டி வைத்ததால் தீ விபத்து ஏற்பட்ட போது  பலர்  சிக்கி பலியாகியுள்ளது தெரியவந்தது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன