மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழாவிற்காக, இதுவரையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட சமூக தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை செல்வநாதன் தெரிவிக்கையில்
இவர்கள் திருத்தலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூடாரங்கள் அமைத்திருப்பதாக கூறினார்.
மடுத்திருத்தலத்தில் தற்போது இடம்பெறும் ஆராதனைகளை தொடர்ந்து இரவு ஒன்பது மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்திய விசேட திருச்செபமமாலை பவனி இடம்பெறும் எனவும் அடிகளார் குறிப்பிட்டார்.
இதேவேளை மடு அன்னையின் திருவிழாவிற்காக வரும் பக்தர்கள் திருத்தலத்தின் புனிதத்தன்மைக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
களியாட்டம், பொழுதுபோக்கு உள்ளிட்ட கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பக்தர்களை கேட்டுள்ளார்.
மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா கடந்த 6ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும், 14ஆம் திகதி மாலை விசேட நற்கருணை ஆராதனை இடம்பெற்றுஇ நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்படும்.
மறுநாள் 15ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.