பொது மக்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொலிசாரினால் எந்தவொரு நபருக்கும் அநீதி அல்லது தவறு இழைக்கப்பட்டால் ,அதுதொடர்பாக உடனடியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்த முறைப்பாடுகளை முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக அமல்படுத்த ஆணைக்குழு தயாராக இருப்பதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக , பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் அவற்றின் விசாரணைகள் சில அதிகாரிகளால் நியாயமற்ற வகையில் நடத்தப்படுகின்றமை ,பக்கசார்பாக செயல்படுதல் ,இலஞ்ஞம் கோரல் ,திட்டுவது கடமையை சரியாக செய்யாமை மற்றும் தவறான நடத்தை ஆகியனவும் இதில்உள்ளடங்குகின்றன..

கடந்த காலப்பகுதியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பாளர்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவு தற்போது இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கொழும்பு 7 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன